1/20/2011 12:26:41 PM
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. பொதுவாக பாலா படம் என்றால் வருடக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும். இந்த தாமதத்தை பாலாவின் குரு பாலுமகேந்திரா உள்பட பலரும் சுட்டிக் காட்டியதன் விளைவு, தனது அவன் இவன் படத்தை ஆறு மாதத்தில் முடிப்பதாக பாலா அறிவித்தார். ஆனால் ஆறு மாதம் கடந்துவிட்டது. என்றாலும் மற்றப் படங்களுடன் ஒப்பிடுகையில் மிக விரைவாக அவன் இவன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் ஏப்ரலில் படத்தை வெளியிட முடியும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளதால் பட ரிலீசுக்கான வேலைகளை இப்போதே தொடங்கியுள்ளனர்.
Post a Comment