ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?
1/20/2011 12:19:10 PM
1/20/2011 12:19:10 PM
தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். சரித்திர கதையான இதன் திரைக்கதையை எழுதுவதில் மணிரத்னத்துடன் இணைந்திருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆனால் படத்தின் இசையமைப்பாளரை மட்டும் மாற்ற மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்கிறது கோலிவுட் வட்டாராம். இளையராஜாவிற்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானை தன்னுடைய படத்தில் இசையமைக்க வைத்து மணிரத்னம், ரகுமான் பிசியாக இருப்பதால் யுவனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது. Source: Dinakaran
Post a Comment