ஆடுகளத்தை வியந்து பார்த்த ர‌ஜினி!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆடுகளத்தை வியந்து பார்த்த ர‌ஜினி!

1/20/2011 11:48:50 AM

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் தனுஷின் ஆடுகளம் பொங்கலுக்கு வெளியாகி உலக முழுவதும் வெற்றி நடை போடுகிறது. பொல்லாதவன் படத்தை இயக்கிய வெற்றிமாறனின் படைப்பு என்பதால் அனைத்து தரப்பினரும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது எதிர்பார்ப்புகளை எல்லா வகை ரசிகர்க¬யும் திருப்தி செய்யும் வகையில் அசத்தியுள்ளார் வெற்றிமாறன். தன்னை முன்னணி இயக்குனர்களின் பட்டியல் சேர்க்கும் அளவிற்கு அவரது திரைக்கதை அமைந்துள்ளது.

ஆடுகளம் டீம்மிற்கு பொங்கல் போனஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளாராம். ஆடுகளத்தைப் பார்த்து வியந்தவர்களில் ர‌ஜினியும் ஒருவர். படம் பார்த்துவிட்டு பட யூனிட்டை வெகுவாக‌ப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார். குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறனை. இதில் விசேஷம், ஆடுகளத்தை இரண்டாவது முறையும் பார்த்திருக்கிறார். படத்தின் மேக்கிங் அவரை கவர்ந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள்.

மதுரை பின்னணியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷுடன் கவிஞர் வஐசா ஜெயபாலன், சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். டெல்லி மாடல் டாப்ஸி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஆடுகளத்தைப் பற்றி தனுஷ் குறிப்பிடுகையில், என்னுடைய சினிமா கே‌ரிய‌ரில் பெஸ்ட் ஃபிலிம், நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறேன். படம் பார்க்கும் போது நீங்களும் அதை உணர்ந்து கொள்வீர்கள் என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment