1/20/2011 2:29:07 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஜ காட் நடிகரோட புது நண்பி, அவரோடு நடிக்கிற புதுமுகம்தானாம்… புதுமுகம்தானாம்… மில்க் இயக்குனர் படத்துலதான் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. ஆஃப் ஸ்கிரீன்லே ரெண்டு பேரோட கெம¤ஸ்ட்ரியும் சூப்பரா இருக்குன்னு யூனிட்ல பேசிக்கிறாங்களாம்… பேசிக்கிறாங்களாம்…
பிரகாச வில்லன் நடிகரு, புதுசா இன்னொரு தயாரிப்பு கம்பெனி தொடங்கப் போறாராம்… தொடங்கப் போறாராம்… இதுக்கு உதவியா இருக்கப்போவது நடிகருக்கு புதுசா கிடைச்சிருக்கிற என்ஆர்ஐ நண்பராம்… நண்பராம்… அந்த நண்பரை வச்சி, கன்னடத்துலேயும் படங்களை தயாரிக்க நடிகரு திட்டம்
போட்டிருக்கிறாராம்… போட்டிருக்கிறாராம்…
அஞ்சாத ஹீரோ நடிகருக்கு வாய்ப்புகள் வருதாம்… வருதாம்… ஆனா, நடிகரு அதை ஏற்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… காரணம், எல்லாமே செகண்ட் ஹீரோ வாய்ப்புகளாம். நடிச்சா, சோலோதான்னு நடிகரு பிடிவாதம் பிடிக்கிறாராம்… பிடிக்கிறாராம்…
Post a Comment