விளம்பரங்களில் பணம் அள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

விளம்பரங்களில் பணம் அள்ளும் பாலிவுட் நட்சத்திரங்கள்

6/27/2011 10:36:51 AM

சினிமாவை விட விளம்பர படங்களால் இந்தி நட்சத்திரங்கள் அமோகமாக சம்பாதிக்கின்றனர். இந்திய ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவது சகஜமாகிவிட்டது. ஆனால், இந்தி நடிகர், நடிகைகளை விட தமிழ், நடிகர், நடிகைகள் விளம்பர படங்களில் நடிப்பது குறைவு. பாலிவுட் ஸ்டார்கள் சினிமா மட்டுமின்றி, விளம்பரத்திலும் பட்டையை கிளப்பி வருகின்றனர். ஒரு விளம்பரத்தில் நடிக்க ஆமிர்கான் அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் வாங்குகிறார். விளம்பரத்தால் மட்டுமே ஆண்டுக்கு ரூ.60 கோடி சம்பாதிக்கிறார். சராசரியாக ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கு 20 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்து சம்பாதிப்பதை விட 6 நாள் விளம்பர படத்தில் நடித்துவிட்டு, இரண்டு மடங்கு சம்பாதித்துவிடுகிறார் என்கிறது இந்தி வட்டாரம்.

நடிகைகள் கேத்ரினா கைப், தீபிகா படுகோன் ஆகியோரின் மொத்த சம்பளத்தில் 60 சதவீதமும், ஜெனிலியாவின் சம்பளத்தில் 90 சதவீதமும் விளம்பர படங்கள் மூலமாகவே கிடைக்கிறது. ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகையும் விளம்பர படங்களில் நடிக்க வருடத்தில் 30 நாட்கள் செலவிடுகின்றனர். சில சமயம் 90 நாள். இதுபற்றி கரீனா கபூர் கூறும்போது, '14 விளம்பர நிறுவனங்களில் நடிக்கிறேன். எனக்கு எவ்வளவு தகுதியோ அந்த அளவு சம்பளம் வாங்குகிறேன். என் பர்சனாலிட்டியை பொருத்து விளம்பர படங்களில் வரவேற்பு அமைகிறது' என்றார். ஆமிர்கான், ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர் ஆகியோர் வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். இதன் மூலம் தரமான படங்களை அவர்களால் தர முடிகிறது. அந்த படங்களின் வெற்றி அவர்களின் விளம்பர தகுதியை தக்க வைக்கிறது. ஆமிரை விட ஷாருக் அதிக விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் வருடத்துக்கு 75 கோடி ரூபாயும், ஹிருத்திக் ரோஷன் 35 கோடி ரூபாயும் சம்பாதிக்கின்றனர். அமிதாப்பச்சன், சல்மான் கான் தலா 8 கோடி, ஐஸ்வர்யாராய் 4 கோடி, கேத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், கரீனா கபூர் தலா 3 கோடி என ஒரு விளம்பரத்தில் நடிக்க சம்பளம் பெறுகின்றனராம்.

 

Post a Comment