சீரியஸ் வேடங்கள் : ரீமா சென் சலிப்பு!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சீரியஸ் வேடங்கள் : ரீமா சென் சலிப்பு!

6/27/2011 12:41:17 PM

ரீமா சென் கூறியது: கடைசியாக 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் இந்தியில் நடித்த 'ஆக்ரோஷ்' என இரண்டு படங்களிலும் நான் ஏற்ற வேடங்கள் கனமானவை. சீரியஸான ரோல். இதை நேர்த்தியாக செய்வதற்கு அதிகபட்ச உழைப்பை செலவிட்டேன். அனுராக் கஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆஃப் வஸெப்பூர்' படமும் இதே வகையை சேர்ந்தது. இதுபோன்ற கடினமான வேடங்களிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பதற்காகவே வி.என்.ஆதித்யாவின் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். இது காமெடி கலந்த கதாபாத்திரம். சீரியஸான வேடங்களிலிருந்து ரிலாக்ஸ் ஆக இப்படம் உதவும். 'கேங்க்ஸ் ஆஃப் வஸெப்பூர்' படத்தில் மனோஜ் பாஜ்பாயின் கேர்ள் பிரெண்ட் வேடம். ரொம்பவும் வேகம் நிறைந்த கேரக்டர். இதன் ஷூட்டிங் முடிந்தது. ரிலீஸுக்காக காத்திருக்கிறேன். இப்படம் தமிழில் ஹிட்டான 'சுப்ரமணியபுரம்Õ பட ரீமேக்கா என்கிறார்கள். ஆனால் அதன் ரீமேக் கிடையாது.




 

Post a Comment