6/27/2011 10:34:06 AM
இந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தமிழில் 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சமந்தா. தெலுங்கு 'விண்ணைத்தாண்டி வருவாயா'வில் ஹீரோயினாக நடித்ததையடுத்து, தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இப்போது, ரோஷித் ஷெட்டி இயக்கும் 'போல் பச்சான்' என்ற இந்திப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். இதில் அபிஷேக் பச்சன், அஜய்தேவ்கன் ஹீரோக்கள். 'இந்த கதைக்கு தென்னிந்திய நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று ரோஹித் விரும்பினார். சமந்தா நடித்த படங்களை பார்த்ததில் அவரது நடிப்பு பிடித்திருந்தது. இதையடுத்து அவரை ஹீரோயினாக தேர்வு செய்ய இருக்கிறார்' என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment