ஒரு ஹிட் கொடுத்தால் 1 கோடி கேட்கிறார்கள்
9/10/2011 11:36:33 AM
9/10/2011 11:36:33 AM
சென்னை, : சூப்பர் டீம் சினிமாஸ் தயாரித்துள்ள படம், 'நந்தா நந்திதா'. ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ் நடிக்கிறார்கள். எமில் இசை. ராம் ஷிவா இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை வெளியிட்டு, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் பேசியதாவது:
அன்றைக்கிருந்த தயாரிப்பாளர்களும் சரி, கலைஞர்களும் சரி பணத்தை பெரிதாக நினைக்காமல் திறமையை பெரிதாக நினைத்தார்கள். வெற்றி பெற்றதும் சம்பளத்தை உயர்த்தவில்லை. 'அன்னக்கிளி'யில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியபோது அவருக்கு நான் கொடுத்த சம்பளம் மூவாயிரத்து ஒன்று. 100 வெள்ளி விழா படங்களை கொடுத்த பிறகே, அவர் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்.
இன்றைக்கு ஒரு ஹீரோவோ, இயக்குனரோ முதல் படத்தில் அறிமுகமாகி, அந்தப் படம் 4 வாரம் ஓடி, கொஞ்சம் பெயர் வந்து விட்டால் அடுத்த படத்துக்கு ஸி70, ஸி 80 லட்சம் வரை கேட்கிறார்கள். இப்போது திறமையால் யாரும் போட்டிப்போட முன்வருவதில்லை. பணத்தால் போட்டிப்போட நினைக்கிறார்கள். இந்த நிலை மாறினால்தான் சினிமா உலகம் வாழும். இவ்வாறு பேசினார்.
இயக்குனர் ஜனநாதன் பேசும்போது, ''சினிமா தொழிலாளர்கள் தங்கள் கஷ்டத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள், தங்கள் கஷ்டத்தை சொல்கிறார்கள். யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தவிக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மன்காரன் கேமரா தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறான். பிலிம் கம்பெனி பிலிம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவை விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் படைப்பாளிகள், தொழிலாளர்கள் உலகம் மட்டும் தவிக்கிறது.
இந்த நிலையில் அனுபவம் வாய்ந்தவர்கள், வழிகாட்டியாக இருந்து இதற்கு தீர்வு காண வேண்டும்'' என்றார். விழாவில் நாசர், தயாரிப்பாளர் கேயார், முருகன், மன்னன், எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜீ.பூபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment