9/10/2011 11:26:05 AM
சென்னை, : இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படம், 'கும்கி'. நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். லட்சுமி மேனன் ஹீரோயின். பிரபு சாலமன் எழுதி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் இப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடந்து வருகிறது. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் இது, இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. காட்டுக்குள் இருக்கும் யானைகள் ஏன் ஊர்களுக்குள் வருகிறது என்பது பற்றிய கதையை கொண்டது இந்தப் படம். இதன் ஷூட்டிங்கிற்காக, கடந்த இரண்டு மாதத்துக்கு முன் தேனி அருகே 5 ஏக்கரில் சாமந்திப் பூ பயிரிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கியமான காட்சிக்காக, இவ்வாறு பூக்கள் வளர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது வளர்ந்ததும் இங்கு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
Post a Comment