7ஆம் அறிவை உருவாக்கியதில் கர்வம் இருக்கிறது : ஏ.ஆர்.முருகதாஸ்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

7ஆம் அறிவை உருவாக்கியதில் கர்வம் இருக்கிறது : ஏ.ஆர்.முருகதாஸ்!

9/24/2011 11:50:48 AM

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம், '7 ஆம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன், ஹாலிவுட் வில்லன் ஜானி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரவி கே.சந்திரன். இசை, ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள்: பா.விஜய், நா.முத்துக்குமார், கபிலன், மதன் கார்க்கி.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. அஞ்சலி, லட்சுமி ராய், ருக்மணி, அபிநயா, இஷா ஷர்வானி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட, உதயநிதி ஸ்டாலின் பெற்றார்.

சூர்யா பேசும்போது, 'தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இந்தப் படம் இருக்கும். ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் குரு போதி தர்மனை, சீனாவில் கடவுளாக வணங்குகிறார்கள். அவர் தமிழர். காஞ்சிபுரத்தில் இருந்து அங்கு சென்றவர். அந்த வேடத்திலும் நடிக்கிறேன். சர்க்கஸ் கலைஞனாகவும் வருகிறேன்' என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, 'இதில் ஆராய்ச்சி இருக்கிறது. வரலாறு இருக்கிறது. மருத்துவம் இருக்கிறது. இதை நான் உருவாக்கி இருக்கிறேன் என்பதில் கர்வம் இருக்கிறது, திமிர் இருக்கிறது. படம் பார்த்த பிறகு ரசிகர்களும் கர்வப்படுவார்கள். படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது' என்றார். விழாவில் துரை தயாநிதி, எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, விஜய், சிவகுமார், கார்த்தி, அருண் விஜய், தனஞ்செயன் உட்பட கலந்து கொண்டனர். ஜெய், அஞ்சலி தொகுத்து வழங்கினர்.

 

Post a Comment