ஹீரோயின் ஆகிறார் ஸ்ரேயா கோஷல்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோயின் ஆகிறார் ஸ்ரேயா கோஷல்?

9/23/2011 10:50:15 AM

பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல், தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் சினிமா பின்னணி பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். பல மொழிகளிலும் 180க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடி, 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் விண்ணை தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் பாடியதற்காக பல விருதுகளைக் குவித்தவர். கோஷல் பார்க்க சினிமா நடிகைகளைப் போலவே படு அழகாக இருப்பார். இதனால் அவரை நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் அவர் ஜகா வாங்கிக் கொண்டே வந்தார். எல்லாருக்கும் 'நோ' என்ற பதிலை மட்டுமே கொடுத்து வந்த கோஷலும் இப்போது நடிப்பு வலையில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இயக்குநர் ஒருவர் கூறிய கதையைக் கேட்டு மெய்மறந்து போய் விட்டாராம். அந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.




 

Post a Comment