ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தை?

|


ஐஸ்வர்யா ராய் வயிற்றில் ஒன்றுக்கு, இரண்டாக குழந்தைதகள் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அமிதாப் பச்சன் குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.

இருப்பினும் ஐஸ்வர்யா ராய் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளருவது குறித்து பச்சன் குடும்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் அவர் எப்போது கர்ப்பமாவார் என்று அவரது குடும்பத்தினரை விட மற்றவர்கள்தான் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தார்.

தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துளளது. இதனால் அமிதாப் குடும்பம் படுகுஷியாகியுள்ளது. இருக்காதா பின்னே இரட்டை சந்தோஷமாச்சே!.

ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் மணி ரத்னத்தின் குரு படத்தில் கணவன், மனைவியாக நடித்திருந்தனர். அந்த படத்தில் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பது போல காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு குட்டி ஐஸ்வர்யா வேண்டும் என்று அபிஷேக்கும், பேரன் தான் வேண்டும் என்று அமிதாப்பும் தெரிவித்திருந்தனர். இருவரது விருப்பத்திற்கேற்ப இப்போது பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாக பிறக்கப் போகிறதோ என்னவோ...!
 

+ comments + 1 comments

24 September 2011 at 16:39

That shows she went through IVF (In Vitro Fertilization).

Post a Comment