'பாசக்கார பயபுள்ளைக, ஐ லவ் யூ இந்தியா!': பாரிஸ் ஹில்டன்

|


பாரிஸ் ஹில்டன் 3 நாள் பயணமாக இந்தியா வந்திறங்கியுள்ளார். வந்ததுமே நம் நாட்டை ரொம்பவும் பிடித்துவிட்டதாம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அங்கு அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான ரசிகர்களும், பத்திரிக்கைக்காரர்களும் குவிந்திருந்தனர். இதைப் பார்த்த பாரிஸ் அடடா இந்தியர்களுக்குத் தான் என் மேல் எவ்வளவு பாசம் என்று நெகிழ்ந்துவிட்டார்.

சந்தோஷத்தில் ஐ லவ் யூ இந்தியா என்று தெரிவித்துள்ளார். இந்திய பயணம் ஒரு அருமையான அனுபவமாக இருக்கும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் மும்பையில் உள்ள ஜேடபுள்யூ மாரியட் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கவிருக்கிறார்.

பாரிஸ் ஹில்டனுக்கு ஷாருக்கான் பார்ட்டி தரப்போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால் ஷாருக்கிடம் கேட்டதற்கு நான் ரா ஒன் படத்தில் பிஸியாக உள்ளேன். பாரிஸுக்கு பார்ட்டியெல்லாம் கொடுக்கவில்லை என்றார்.

அதுவும் சரிதான்…!

 

Post a Comment