திருமணம் செய்தேனா? ஜெனிலியா கோபம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருமணம் செய்தேனா? ஜெனிலியா கோபம்!

9/24/2011 11:45:21 AM

இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மீண்டும் நடித்து வருகிறார் ஜெனிலியா. ஏற்கனவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வரும் நிலையில், இந்தப் பட ஷூட்டிங்கின் போது இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக மும்பை வட்டாரத்தில் செய்தி வெளியானது. இதுபற்றி ஜெனிலியா கூறியதாவது: கடந்த ஐந்து வருடங்களாக இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை. எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன சொல்லவென்று தெரியவில்லை. நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படி சொல்பவர்கள் எங்கே, எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா? என் கல்யாண தேதியையும் அவர்கள் அறிவித்தால் நன்றாக இருக்கும். தயவு செய்து இனிமேல் இதுபற்றி பேச வேண்டாம். இதை கோரிக்கையாகவே வைக்கிறேன். இப்படி வரும் செய்திகள் எங்கள் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்திலும் சலசலப்புகள் ஏற்படுகின்றன. ரிதேஷை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நீண்டகால நண்பர்களாக இருக்கிறோம். அதைத்தாண்டி எங்களுக்குள் ஏதுமில்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.

 

Post a Comment