9/24/2011 11:57:55 AM
தனுஷ், ரிச்சா நடித்துள்ள படம், 'மயக்கம் என்ன'. இதுபற்றி நிருபர்களிடம் இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது: இந்தப் படத்துக்கு பல தலைப்புகள் மாற்றப்பட்டது உண்மை. இது சதாரண மனிதனின் வாழ்க்கையைச் சொல்லும் படம். அப்படிப்பட்டவன் வாழ்க்கையில் தடுமாற்றங்கள் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் தலைப்பிலும் தடுமாற்றம். அண்ணன் தம்பி இணைந்து பணியாற்றுவதால் படம் சீக்கிரம் முடிந்து விடும் என்பதை தவிர வேறெந்த சவுகரியமும் இல்லை. இந்தப் படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளேன். இதுதான் முதலும், கடைசியுமான பாட்டு. இனி பாடவே மாட்டேன். 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரியான வித்தியாசமான படங்களை கைவிடவில்லை. அடுத்து புதிய முயற்சிகள் இருக்கும். போட்டோகிராபர்களை குறுகிய வட்டத்தில் வைத்து பார்க்கிறோம். அவர்கள் அதையும் தாண்டி சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இதில் சொல்லியிருக்கிறேன். எனது எல்லாப் படங்களையும் போன்று இதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை ரிச்சா சிறப்பாகச் செய்திருக்கிறார்.
Post a Comment