9/24/2011 11:42:48 AM
தேசிய ரோஸ் தினத்தையொட்டி பெங்களூர் கித்வாய் நினைவு மருத்துவமனைக்குச் சென்ற ஷெரின், அங்கு கேன்சர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து நேற்றுமுன்தினம் பரிசு பொருட்கள் வழங்கினார். பின்னர் அங்கு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு நெருக்கமானவர்கள் சிலரை கேன்சருக்குப் பறிகொடுத்திருக்கிறேன். அதனால் கேன்சர் குழந்தைகள் மீது அதிக அக்கறை உண்டு. ஆண்டுதோறும் ரோஸ் தினத்தில் மட்டும் இக் குழந்தைகளை சந்திப்பதில்லை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வந்து விடுவேன். வெறும் இனிப்பும், பரிசு பொருட்களும் இவர்கள் வியாதியை குணப்படுத்திவிடாது என்பது தெரியும். அதனால் நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகிறேன். கணிசமான தொகை சேர்ந்ததும் அறக்கட்டளை துவங்கி கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய இருக்கிறேன்.
Post a Comment