'நிம்மதி வேணும்...'- திருப்பதியில் தமன்னா வேண்டுதல்

|


திருப்பதி திருமலைக்கு திடீரென போன நடிகை தமன்னா மனமுருக ஏழுமலையானை வேண்டிக் கொண்டார்.

சமீபத்தில் திருமலைக்கு தமன்னா வருவது இது இரண்டாவது முறையாகும்.

தமிழில் ஓஹோவென்றிருந்த தமன்னா, சிறுத்தை, வேங்கை படங்களுக்குப் பிறகு தமிழில் வாய்ப்பே இல்லாமல், தெலுங்குக்குப் போனார்.

இரு மாதங்களுக்கு முன்பு, ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் திருமலைக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்து சாமி கும்பிட்டதாகக் கூறி சர்ச்சை கிளம்பியது. பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திடீரென நேற்று திருமலைக்குச் சென்று சாமி கும்பிட்டார் தமன்னா. ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு வந்த அவர், பின்னர் இங்கிருந்து திருமலைக்கு தன் தாயாருடன் காரில் சென்றார். அதிகாலை சுப்ரபாதம் தரிசனத்துக்குச் சென்ற அவர் அடக்க ஒடுக்கமாக சுடிதார் அணிந்திருந்தார்.

தரிசனம் முடிந்த பிறகு அவர் கூறுகையில், "எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நான் திருமலைக்குச் சென்றுவிடுவேன். இந்த முறை மன அமைதியும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் வேண்டி அங்கே சென்றிருந்தேன்," என்றார்.

திருமலையில் தரிசனம் முடிந்ததும் மீண்டும் சென்னை திரும்பிய தமன்னா, பின்னர் கொச்சியில் ராம் சரண் தேஜாவுடன் டூயட் பாட கிளம்பிவிட்டார்.
 

Post a Comment