ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் 'பில்லா 2'. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து 'பில்லா 2' உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. ஆறு, வேல், சிங்கம் என ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த மூன்று படங்களுமே ஹிட். இருந்தும் சிங்கம் இரண்டாம் பாகத்தில் நடிக்க சூர்யா அதிக ஆர்வம் காட்டவில்லை என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வந்தது. மேலும், கௌதம் போன்ற இயக்குனர்கள் தற்போது பிஸி என்பதால் ஹரிக்கு சூர்யா கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிங்கம் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ராதாரவி, நாசர், விவேக், விஜயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை.
Post a Comment