எஸ்ஏசிக்கு எதிராக ராவுத்தர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

|


SA Chandrasekaran and Ibrahim Ravudhar
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு எதிராக, இப்ராகிம் ராவுத்தர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

பெப்சி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட, அதில் ஒரு பிரிவுக்குத் தலைவராக மாறிய இப்ராகிம் ராவுத்தர், எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோரை நீக்கிவிட்டதாகவும், 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்திருப்பதாகவும் அறிவித்தார்.

ஆனால் எஸ்ஏ சந்திரசேகரன் இதனை ஏற்கவில்லை. தான் இன்னும் தலைவராக தொடர்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகரனால் தங்களுக்கு ஆபத்து என்றும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் இப்ராகிம் ராவுத்தர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, "தயாரிப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்ஏ சந்திரசேகரன் தலைவராகத் தொடரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடவும் முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்," என்று தீர்ப்பளித்தார்.
Posted by: Shankar
 

Post a Comment