பட வாய்ப்புகளை இழந்தது ஏன்? வடிவேலு விளக்கம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பட வாய்ப்புகளை இழந்தது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் வடிவேலு. காமெடியில் தனக்கென தனிபாணி வகுத்து நடித்து வந்தார் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சினிமாவில் அவருக்கு இடைவெளி ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு.  சிம்புதேவன் இயக்கிய 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' என்ற படத்தில் அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். அப்படம் ரூ.4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. வெற்றிகரமாக ஓடி ரூ.16 கோடி வரை சம்பாதித்தது. 18ம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள்போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த சிம்புதேவன் 2ம் பாக கதையை அவரிடம் கூறினார். அது பிடித்திருந்ததை அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி வடிவேலு கூறும்போது, ''சிம்புதேவன் கூறிய 'இம்சை அரசன்' படத்தின் 2ம் பாக கதை பிடித்திருந்தது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அதிகபட்சமாக நகைச்சுவை காட்சிகள் சேர்த்திருக்கிறார். இதுபற்றி இருவரும் பேசி வருகிறோம். ஷூட்டிங் பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இடைவெளிவிட்டிருந்தேன். நிறைய படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதுபற்றி கவலை இல்லை. இந்த வருடம் முழுவதும் பிஸியாகவே இருக்கிறேன். இடைவெளி எடுத்துக்கொண்ட நேரத்தில் என் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்'' என்றார்.


 

Post a Comment