கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை

|

7aam Arivu Actress Leaves Kollywood
ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம்.

ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் எங்கள் கருணையில் வாழ்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு பெங்களூர் தோற்க வேண்டும் என்ற நிலை இருந்ததை சுட்டிக் காட்டி இப்படி குசும்பு காட்டியிருந்தார் தன்யா.

இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மெசேஜ்கள் ஃபேஸ்புக்கில் போடப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக பல பக்கங்கள் ஃபேஸ்புக்கில் துவங்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம் தன்யா. இப்படி எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம்.

இதையடுத்து அவர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் சென்னை மற்றும் தமிழ் திரைப்பட உலகை விட்டே செல்கிறேன். இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். இனி கோலிவுட்டுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் தற்போது ஒப்பபந்தமாகியுள்ள அனைத்து படங்களையும் ரத்து செய்துவிட்டேன். அவ்வளவு தான் என்றார்.

வெட்டியா ஏன் வாயை குடுப்பானேன்!
Close
 
 

Post a Comment