புரியாத புதிய பாடல்களை விட காலங்களை கடந்தாலும் தேன்போன்று இனிக்கும் பழைய பாடல்கள் இன்றைய ரசிகர்களை கவரத்தான் செய்கிறது. ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ரசிகர்களின் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு கருத்தை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்தவாரம் திங்கட்கிழமை சிறப்பு விருந்தினர் விருப்பம் ஒளிபரப்பானது. அதில் நடிகை சுகன்யா பங்கேற்று தனக்கு பிடித்த பழைய பாடல்களை கூற மதுரமான அந்த பாடல்கள் ஒளிபரப்பாகின. எங்கள் விருப்பம், நேயர் விருப்பம், பாட்டும் பின்னணியும் என தினம் ஒரு கருத்தோடு ஒளிபரப்பாகும் இந்த தேன்கிண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியை பற்றியும் சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சிக்கு ஏற்ப பாந்தமாய் புடவை கட்டிக்கொண்டு அழகாய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பு அம்சம். மாடர்ன் டிரஸ் தொகுப்பாளினிகளுக்கு இடையே புடவை கட்டிய இந்த தொகுப்பாளினியின் தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக இருப்பதாக நேயர்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுகிறது.