'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விஷால்!

|

Vishal Play Lead Role Saravanan Next
எங்கேயும் எப்போதும் படம் மூலம் கவனத்தைக் கவர்ந்த இளம் இயக்குநர் சரவணன்.

இவர் தனது அடுத்த படத்தை லிங்குசாமி நிறுவனத்துக்கு இயக்கப் போவதாகவும், அதில் ஆர்யா நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

இப்போது அந்தப் படத்திலிருந்து ஆர்யா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கவிருப்பவர் விஷால். சமீபத்தில் விஷாலை நேரில் சந்தித்து கதை சொன்னார் சரவணன். கதை பிடித்துப்போனதால், சமர் மற்றும் சுந்தர் சி படங்கள் முடிந்ததும் ஷூட்டிங் போகலாம் எனக் கூறியுள்ளாராம் விஷால்.

இதற்கிடையே, தொழிலாளர் போராட்டம் காரணமாக தடைபட்டிருந்த சமர் பட வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன.

இந்தப் படத்தின் முதல் ஸ்டில்லை மே 1-ம் தேதி வெளியிட்டிருந்தார் விஷால்.

அடுத்து பாங்காக் மற்றும் மலேசியாவிலும் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்களாம்.
 

Post a Comment