தமிழ் - தெலுங்கில் வெளியாகும் காதல் 'காந்தம்' - ஜெமினி நிறுவனம் வெளியிடுகிறது!

|

Gaandham Release Tamil Telugu
இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களில் ஒன்று காந்தம். இரு இளம் உள்ளங்களில் காதலை, கொஞ்சமும் விரசமின்றி, அழகாகச் சொல்லியிருக்கிறாராம் புதிய இயக்குநர் சரவணன்.

கதாநாயகனாக நடித்துள்ள தேஜ், ஏற்கெனவே கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையல் நடித்தவர். காந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனத்தையும் இவர்தான் உருவாக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரஷ்மி நடித்திருக்கிறார்.

நியூ மூன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்ஜீவ் கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்த ஜெமினி நிறுவத்தினர் தாங்களே இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதாக கூறி வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறார்கள்.

புதுமுக இசையமைப்பாளர் பிரதாப், இசையில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள 'காந்தம்', தெலுங்கில் அயஸ் காந்தம் என்ற பெயரில் வெளியாகிறது.

டெலிபிரம்மா...

இந்தப் படத்தின் விளம்பரங்களில் டெலி பிரம்மா நிறுவனம் கைகோர்த்துள்ளது. காந்தம் பட போஸ்டர்கள் மற்றும் படம் குறித்த தகவல்களை மொபைல் மூலமே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். intARact.mobi என்ற முகவரியில் இதற்கான அப்ளிகேஷன் உள்ளது. இதில் படத்தின் பாடல்கள், விமர்சனம், கேலரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் காணக் கிடைக்கும்.
 

Post a Comment