பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம், 'ரவுடி ரத்தோர்'. அக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். ஜூன் 1ம் தேதி படம் வெளியாகிறது. இதில் பிரபுதேவா கேட்டுக்கொண்டதற்காக ஒரு பாடலுக்கு அக்ஷய்குமாருடன் விஜய் ஆடியுள்ளார். இதுபற்றி பிரபுதேவா கூறும்போது, "சமீபத்தில் விஜய்யை சந்தித்தபோது அக்ஷய்குமாருடன் ஆடுகிறீர்களா என்று கேஷுவலாக கேட்டேன். சரி என்றார். ஒரு பெரிய ஹீரோ, நான் கேட்டதற்காக இந்திப் படத்தில் ஆட இப்படி ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் சில நாட்களில் இந்தப் பாடலை படமாக்க உள்ளோம்" என்றார்.
Post a Comment