எஸ் 2... சத்யம் சினிமாவின் இன்னொரு மல்டிப்ளெக்ஸ் - கமல் திறந்து வைத்தார்!

|

Kamal Launches Sathyam S New Mall S2

சத்யம் சினிமாஸின் இன்னொரு மல்டிப்ளெக்ஸான எஸ்2 (ஸ்பெக்ட்ரம் மால்) இன்று திறந்து வைக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாஸன் இந்த மல்டிப்ளெக்ஸை திறந்து வைத்தார்.

வட சென்னையின் முதல் மல்டிப்ளெக்ஸ் என்ற பெருமையை இதன்மூலம் எஸ்32 பெறுகிறது. இதில் 5 திரையரங்குகள் உள்ளன.

ஷாப்பிங் செய்ய வசதியாக ஏராளமான கடைகள், உணவகங்கள் இந்த மாலில் உண்டு.

முன்பு வீனஸ் என்ற பெயரில் இருந்த திரையரங்கம்தான் இப்போது எஸ்2 ஆக மாறியிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

சத்யம் சினிமாஸ் ஏற்கெனவே அண்ணாசாலையில் 6 அரங்குகளை வைத்துள்ளது. அடுத்து பக்கத்திலேயே எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 8 அரங்குகள் கொண்ட எஸ்கேப் சினிமாவும் சத்யம் நிறுவனத்துக்கு சொந்தமானதுதான்.

அடுத்து மூன்றாவதாக இந்த எஸ் 2 வை திறந்துள்ளது.

நடிகர் சங்கக் கட்டடத்தில் 8 திரையரங்குகள் கொண்ட புதிய மல்டிப்ளெக்ஸையும், தென் சென்னையில் தியாகராஜா தியேட்டரை இடித்துவிட்டு 5 அரங்குகள் கொண்ட புதிய மல்டிப்ளெக்ஸையும் சத்யம் சினிமாஸ் உருவாக்கி வருகிறது.

வடசென்னையில் விரைவில் இன்னொரு மாலும் திறக்கப்பட உள்ளது. இது சத்யம் சினிமாஸுக்கு சொந்தமானதல்ல. அது பழைய கிரவுன் தியேட்டர். 4 அரங்குகள் இதில் அமையவிருக்கின்றன!

 

Post a Comment