தூம் 3: ரஜினிக்கு எத்தனை கோடி சம்பளம் தரவும் தயாராக நிற்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள்!!

|

Aamir Khan Keen Have Rajinikanth Dhoom 3   

கடந்த ஆண்டிலிருந்தே தூம் 3 குறித்து பல செய்திகள். இந்தப் படத்தில் ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறினார்கள்.

ஆனால் ரஜினி தரப்பிலிருந்தே, இந்தப் படத்தில் அவர் நடிப்பதாக இல்லை என்று விளக்கம் வெளியானது. அடுத்த சில தினங்களில் இந்தப் படத்தில் அமீர்கான் அந்த வில்லன் வேடத்தில் நடிப்பார் என அறிவித்தனர்.

இப்போது மீண்டும் தூம் 3 உடன் ரஜினியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்பாளர் தரப்பில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து ரஜினியுடன் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் விசாரித்தபோது, "ரஜினி சார்தான் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும். இப்போது எங்கள் அளவில் சொல்வதற்கு எதுவும் இல்லை," என்றனர்.

ரஜினி நடித்தால் இந்தப் படம் பெரிய ரேஞ்சுக்குப் போய்விடும் என்பது அமீர்கானின் எதிர்ப்பார்ப்பாம். தயாரிப்பாளரிடம் தொடர்ந்து இதை அவர் வலியுறுத்துவதால், ரஜினிக்கு சம்பளமாக எத்தனை கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்... அதாவது அமீர்கான் சம்பளத்தைப் போல ஒன்றரை மடங்கு!

ஆனால்... கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!

 

Post a Comment