தமிழ் பட ஹீரோயின் ராதிகா ஆப்தே லண்டன் இசை அமைப்பாளரை மணக்கிறார். 'வெற்றிச் செல்வன்' படத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே. இவருக்கும் லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனடிக்ட் டைலருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது: வெற்றிச் செல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக்கிறேன். வக்கீல் வேடம் என்பதால் அதற்கான ஒத்திகை பார்த்தேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் கதாபாத்திரம் ஹீரோவை சார்ந்த கதாபாத்திரங்களாகவே இருக்கும். இப்படத்தை பொறுத்தவரை அதில் வித்தியாசம் இருக்கிறது. இதில் ஹீரோயின் வேடம் என்றாலும் அது ஹீரோவை சார்ந்ததாக இருக்காது. தனித்து இயங்கும் கேரக்டர். இதில் நடிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காகவும், ஷூட்டிங்கிற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்துகொண்டிருக்கிறேன். இது எனக்கு அமைதியற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அதை ரசனையோடு ஏற்கிறேன். திட்டமிட்டு செய்வதால் எதிலும் சிக்கல் ஏற்படுவதில்லை. இதையொரு புகாராக சொல்லவில்லை. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். சமீபத்தில் ராதிகா ஆப்தேக்கும் லண்டன் இசை அமைப்பாளர் பெனடிக் டைலருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
Post a Comment