இலங்கை 'போலி டாக்டரிடம்' வலிக்கு சிகிச்சை பெற்ற பிபாஷா பாசு!

|

Bipasha Gets Treatment From Lanka   

இலங்கையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் இலங்கை மருத்துவக் கழகத்தால் போலி டாக்டர் என்று அழைக்கப்படும் எலியந்தா வைட் என்பவரிடம் இந்தி நடிகை பிபாஷா பாசு தோள்பட்டை வலிக்கு சிகிச்சை எடுத்துள்ளார்.

இந்த எலியந்த வைட் வேறு யாருமல்ல, ராஜபக்சேவின் ஆஸ்தான மருத்துவர் ஆவார்.மேலும் சச்சின் டெண்டுல்கர், ஆசிஷ்நெஹ்ரா மற்றும் கெளதம் கம்பீர் ஆகிய இந்திய வீரர்கள் உள்பட பல கிரிக்கெட் வீரர்களுக்கும் இவரது கை வைத்தியம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போலி டாக்டர், மோசடிக்காரர், பொய் சொல்லி என்று இலங்கை மருத்துவக் கழகத்தாலும், இலங்கையில் உள்ள மருத்துவத்தை முறையாகப் படித்த டாக்டர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்படுபவர் இந்த எலியந்தா. இவர் டாக்டருக்கும் படிக்கவில்லை, டிகிரி கூட முடித்ததாக தெரியவில்லை.

ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி இவர் ஏதோ ஒரு மருத்துவத்தை கடைப்பிடித்து வருகிறார். இவர்தான் ராஜபக்சேவின் நிரந்தர மருத்துவ ஆலோசகராகவும் உள்ளார். இதனால் இலங்கைக்கு வருவோரிடம் எல்லாம் இந்த எலியந்தாவை அறிமுகப்படுத்தி எலியந்தாவின் பிஆர்ஓ போல செயல்படுகிறார் ராஜபக்சே.

இப்படித்தான் சச்சின் டெண்டுல்கர், கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கும் இந்த எலியந்தா தனக்குத் தெரிந்த கைவைத்தியத்தை முன்பு செய்துள்ளார். இவரைத் தேடி சிகிச்சை பெற வந்ததால்தான் கம்பீரம், நெஹ்ராவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். ஆனால் சச்சினை மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.

இந்த நிலையில் எலியந்தா வைட்டிடம், தனது வலிக்காக சிகிச்சை பெற்றுள்ளாராம் பிபாஷா பாசு. அவருக்கு ஏற்பட்ட வலியை எலியந்தா தனது சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட்டாராம். சமீபத்தில் கொழும்பில் நடந்த ஒரு ரக்பி போட்டிக்கு வந்திருந்தார் பிபாஷா பாசு. அதில் இடம் பெற்ற டான்ஸ் நிகழ்ச்சிக்காக அவர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது வழுக்கி விட்டார். இதனால் தோள்பட்டை பிசகி விட்டதாம், வலி தாங்க முடியவில்லையாம். டாக்டர்கள் வந்து மருந்து கொடுத்ததால் தோள்பட்டை பிசகல் சரியானதாம், ஆனாலும் வலி நிற்கவில்லையாம்.

இதையடுத்து எலியந்தாவைக் கூப்பிட்டு பிபாஷாவின் தோள்பட்டையைக் காண்பித்துள்ளனர். அவர் ஏதோ ஒரு சிகிச்சையை அளித்துள்ளார், இதையடுத்து வலி போய் விட்டதாம்.

பிபாஷாவுக்கு ஏற்பட்ட இந்த வலியைப் போக்க முக்கியக் காரணமே ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேதானாம். அவர்தான் தனது அப்பாவுக்குப் போனைப் போட்டு மேட்டரைக் கூறியுள்ளார். பதறிப் போன ராஜபக்சே, உடனே எலியந்தாவுக்குப் போனைப் போட்டு வரவழைத்து பிபாஷாவுக்கு நிவாரணம் தேடித் தந்தாராம்.

 

Post a Comment