சின்னத்திரை நடிகை ரம்யா, பாலுமகேந்திரா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: டி.வி. தொடர்களில் நடித்துவருகிறேன். அடுத்த கட்டமாக சினிமா வாய்ப்பு வந்தது. 'மந்திரப்புன்னகை' படத்தில் துணிச்சலான கேரக்டரில் நடித்தேன். 'தடையறத் தாக்க' படத்தில் அருண் விஜய்யின் தோழியாக நடித்திருக்கிறேன். 'ரெண்டாவது படம்' எனக்கு முக்கிய படமாக இருக்கும். இதுதவிர பாலுமகேந்திரா இயக்கி வரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். என்னைச் சுற்றி நடக்கும் கதை. சிறந்த குணச்சித்திர நடிகையாக வரவேண்டும் என்பது ஆசை.
Post a Comment