அஜ்மல், ராதிகா ஆப்தே நடிக்கும் படம், 'வெற்றிச் செல்வன்'. சிருஷ்டி சினிமா சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் படம் பற்றி கூறியதாவது: அஜ்மல் மருத்துவக் கல்லூரி மாணவர், மனோ இசை கல்லூரி பேராசிரியர். ஷெரீப் டான்சர். இப்படி வெவ்வேறு துறையில் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே வருகிறார் வழக்கறிஞர் ராதிகா ஆப்தே. இதனால் என்ன நடக்கிறது என்பதை காதல், ஆக்ஷன் திகில் கலந்து சொல்லியிருக்கிறோம். ராதிகா, இதில் கொடுமைகளை கண்டு பொங்கி எழும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ராதிகாவுக்கு தமிழ்நாட்டு பெண் வழக்கறிஞர்கள் பற்றித் தெரியாது. இந்த கேரக்டரைச் சொன்னதும் பெண் வழக்கறிஞர்களை பார்க்க வேண்டும் என்றார். இதற்காக, நீதிமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்றோம். அங்கு பெண் வழக்கறிஞர்களை கவனித்து, அவர்கள் மாதிரியே நடித்துக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார். கமர்சியல் படம் என்பதால் கிளாமராகவும் நடித்துள்ளார்.
Post a Comment