சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி மலையாளத்தில் 'கிளைமாக்ஸ்' என்ற படம் உருவாகிறது. இதில் சில்க் வேடத்தில் நடிக்கும் சனாகான், நிருபர்களிடம் கூறியதாவது: மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர், ஆண்டனி ஈஸ்ட்மென். அவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களை தொகுத்து எழுதும் 'கிளைமாக்ஸ்' படத்தை அனில் இயக்குகிறார். அதில் நடிக்கிறேன். இந்தப்படம் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில், 'யு' சான்றிதழ் வாங்கும் நோக்கத்தில் உருவாகிறது. பாடல்களில் கவர்ச்சியாக வருவேன். பிகினி டிரெஸ்சில் வர மாட்டேன். சில்க்கின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் விதமாக இப்படம் அமையும். சில்க்கின் கண்கள் மீது காதல் உண்டு. அதுபோல் என் சிரிப்பு மற்றும் உதடுகள் மீதும் காதல் உண்டு. ஆனால், நிஜ வாழ்க்கையில் யாருடனும் எனக்கு காதல் ஏற்பட்டது இல்லை.
Post a Comment