ஆக்ஷனுக்கும் லாஜிக் வேண்டும்: மகிழ் திருமேனி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆக்ஷன் படத்துக்கும் லாஜிக் அவசியம் என்று இயக்குனர் மகிழ் திருமேனி கூறினார். அருண்விஜய், மம்தா நடித்த 'தடையறத் தாக்க' படத்தை இயக்கிய மகிழ்திருமேனி நிருபர்களிடம் கூறியதாவது:
 'தடையற தாக்க' ஆக்ஷன் படமாக இருந்தாலும் எந்த இடத்திலும் லாஜிக் மீறல் இல்லை. ஆக்ஷன் படங்களுக்கு லாஜிக் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க மாட்டேன். லாஜிக்குடன் ஆக்ஷன் படத்தை இயக்க முடியும். 'தடையறத் தாக்க' படம் திட்டமிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டது. இடையில் ஏற்பட்ட தாமதங்களுக்கு நான் காரணம் இல்லை. தயாரிப்பாளருக்கும் எனக்கும் கருத்துவேறுபாடு என்பதிலும் உண்மையில்லை. அடுத்து நம் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படும் அண்டர்கிரவுண்ட் காவல்துறையை மையமாக வைத்து படம் இயக்குகிறேன். அவர்களின் செயல்பாடு, நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஒரு முன்னணி ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு மகிழ் திருமேனி கூறினார்.


 

Post a Comment