பவர் ஸ்டார் எனப்படும் டாக்டர் சீனிவாசனைப் பற்றிய செய்தி தினசரி எப்படியாவது அச்சில் ஏறிவிடுகிறது.
இதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது ‘அட’ என நிமிர்ந்து பார்க்கும் அளவு நிலைமை மேம்பட்டிருகிறது.
ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் சீனிவாசன், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் கை கோர்க்கும் இன்னொரு ஹீரோ சந்தானம்!
படத்துக்கு கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிட்டுள்ளனர் (இது ஒரு சாக்லேட் விளம்பர வாசகம்!)
சும்மனாங்காட்டியும் ஏதோ கிளப்பிவிடுகிறார்களா… அல்லது நிஜமான செய்திதானா என தெரிந்து கொள்ள சந்தானத்திடமே கேட்டுவிட்டோம்.
அவரும் சீரியஸாக, “ஏங்க… உண்மையா இருக்கக் கூடாதா… பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்,” என்றார்.
செய்தி வெளியானதும் இப்பவே பிஸினெஸ் விசாரணை வேற ஆரம்பிச்சிடுச்சாம்!
Post a Comment