'கரீனாவை திருமணம் செய்தாலும் ரூ 1000 கோடி சொத்துகளின் காப்பாளர் சயீப் அலிகான்!'

|

Saif Can Be Custodian After Marriage Kareena Kapoor   

போபால்: கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டாலும், ரூ 1000 கோடி வக்பு வாரிய சொத்துகளுக்கு காப்பாளராக சயீப் அலிகான் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் மத்தியப் பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

படோடி சமஸ்தானத்தின் நவாபாக இருந்தவர் மன்சூர் அலிகான். அவர் கடந்த ஆண்டு மறைந்த பிறகு, அவர் மகன் சயீப் அலி கான் நவாபாக தொடர்கிறார்.

இந்த குடும்பத்துக்கு போபாலில் மட்டும் 2000 ஏக்கரில் சொத்துகள் உள்ளன. தவிர வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ 1000 கோடி சொத்துகளுக்கு மன்சூர் அலிகானின் மகள் சபா சுல்தான் பாதுகாவலராக (முத்தவல்லி) உள்ளார்.

அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தால், அப்போது சயீப் அலிகான்தான் முத்தவல்லியாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இஸ்லாமியர் அல்லாத கரீனாவை திருமணம் செய்வதால், அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை எழுப்பியவர் சயீபின் அத்தை மகன் பைஜ் பின் ஜங்.

ஆனால் இந்தக் கேள்வி தேவையற்றது என மத்தியப் பிரதேச வக்பு வாரிய தலைவர் குப்ரான் ஆசாம் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment