மேக்கப் மேன், உதவியாளர்களுக்கு நடிகர், நடிகைகளே சம்பளம் தர வேண்டும் என பாலிவுட் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். கோலிவுட் நடிகர்களே இனி தங்கள் உதவியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இது பேச்சளவிலேயே உள்ளது. இதே கோரிக்கையை பாலிவுட் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வைத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த கட்டுப்பாட்டை பாலிவுட் ஸ்டார்கள் ஏற்றுள்ளனர். இதுபற்றி இந்தி திரைப்பட மற்றும் டி.வி தயாரிப்பாளர்கள் கில்ட் துணை தலைவர் முகேஷ் பட் கூறும்போது, ''ஏற்கனவே சேவை வரி தயாரிப்பாளர்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் சில நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். சில டிரைவர் மற்றும் உதவியாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும், மேக்கப் மேன் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்கின்றனர். இனி நடிகர்கள்தான¢ தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். இதை தயாரிப்பாளர்கள் தலையில் சுமத்தக்கூடாது" என்றார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஷாருக்கான், ஆமிர் கான், அஜய் தேவகன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப், ரன்பீர் கபூர், சல்மான் கான் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சைப் அலிகான், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இம்மாதம் முதலே இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
Post a Comment