எல்லோரும் இங்க வாங்க.. சன்னி லியோன், பிடிதா சண்டையைப் பாருங்க!

|

Sunny Leone Has Nothing New Show I Have Bidita Bag

சாதாரணப் பெண்கள் இருவர் சண்டை போட்டாலே அந்தஇடம் ஒரு மாதிரியாகிப் போகும், காதெல்லாம் வலிக்கும், 'கேட்கவே'முடியாது... அதுவே பிரமாண்டக் கவர்ச்சியுடன் வலம் வரும் பெண்கள் சண்டை போட்டால் எப்படி இருக்கும்... அப்படி ஒரு சண்டை பாலிவுட்டில் ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில்தான் பிபாஷா பாசுவை பூனம் பாண்டே சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோனை வம்புக்கிழுத்துள்ளார் பிடிதா பேக் என்கிற புதுமுக நடிகை.

From Sydney With Love என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகைதான் பிடிதா பேக். ஆகஸ்ட்டில் படம் தியேட்டர்களுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள சன்னி லியோனைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார் பிடிதா.

ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆங்காரம் என்று அவரிடம் கேட்டால், உலகத்துக்கே எல்லாவற்றையும் காட்டி விட்டார் சன்னி லியோன். பிறகு இந்தப் படத்தில் என்னத்தைப் பெரிதாக காட்டி விட்ப போகிறார். காட்டுவதற்கு அவரிடம் என்னதான் மிச்சம் உள்ளது. ஆனால் நான் அப்படி இல்லை. புத்தம் புதுமுகம். எனது கவர்ச்சி புதுசு, அழகு புதுசு. அப்படியே காட்டுவதை விட அளவோடும், ஒளிவு மறைவாகவும் காட்டும் கவர்ச்சிதான் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியது. அந்த வகையில் சன்னியை விட என்னிடம் காட்ட நிறையவே இருக்கிறது என்றார் அதிரடியாக.

மேலும் அவர் கூறுகையில், சன்னி லியோனைப் பெரிய கவர்ச்சி நடிகை என்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை. அதில் கூட அவர் உலகின் முன்னணியில் இருந்ததில்லை. எனவே அவரைப் பற்றி பெரிதாக ஊதி விடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்றார் பொறுமியபடி...

சன்னி என்ன பதில் சொல்லப் போகிறாரோ....?

 

Post a Comment