அஜீத் படத்துக்கு டைட்டில் குழப்பம்

|

garbled on ajith film's title

அஜீத் நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைப்பதில் குழப்பம் நிலவுகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்நிலையில் 'சிறுத்தை' படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க அஜீத் ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்படத்துக்கு 'வெற்றி கொண்டான்' என்று பெயரிடப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. திரையுலகில் முன்னணி நடிகர் இடத்தை பிடிக்க அஜீத் பல்வேறு சோதனைகளை தாண்டி வர வேண்டி இருந்தது. அதை குறிக்கும் வகையில் இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதுபற்றி இயக்குனர் சிவா கூறும்போது, "அஜீத் படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நிச்சயம் 'வெற்றி கொண்டான்' கிடையாது. கற்பனையாக யாராவது ஒரு தலைப்பை வைத்தால் அதை ஏற்க முடியாது. இதுவேண்டுமானால் வதந்தி பரப்புபவர்களின் விருப்பமாக இருக்கலாம். இப்பட ஸ்கிரிப்ட் இறுதிகட்ட பணியில் நான் இருக்கிறேன். சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். அவரிடம்  ஸ்கிரிப்ட் பற்றி ஆலோசித்தேன். அதைக்கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இதுவொரு உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்குபடமாக இருக்கும். யாருடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் கதை அல்ல" என்றார்.
 

Post a Comment