தெலுங்கில் சுந்தரபாண்டியன்... பீமினேனி சீனிவாசராவ் இயக்குகிறார்

|

Bheemineni Bags Another Tamil Film   

சசிகுமார் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கிறது. இதனை பீமினேனி ஸ்ரீனிவாசராவ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தமிழ்படம்' தெலுங்கில் ‘சுடிகாடு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அல்லாரி நரேஷ் நடித்த இந்த படத்தை பீமினேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கியிருந்தார். இவர் தற்போது தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுந்தரபாண்டியன் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் அடிபடுகின்றன.

சசிகுமார் லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பலத்த போட்டி நிலவியது. கடைசியில் பீமினேனி கைக்கு இந்த படம் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை பீனினேனி ஸ்ரீனிவாசராவ் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

சுப்ரமணியபுரத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஆனந்தபுரம் 1980' மூலம் தெலுங்கு திரை உலகில் சசிகுமார் கால் பதித்தார். தற்போது அவருடைய மற்றொரு படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment