போதையில் மிதக்கும் இளைஞர்கள்: 'காதல்' சரண்யா வேதனை

|

Actress Kaadhal Saranya Turns Short Film   

போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார்.

போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா.

போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது.

இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment