சென்னை : விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 30,ம் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி நிருபர்களிடம் விஜய் சேதுபதி கூறியதாவது: படத்தை பார்த்த மீடியாவும் திரையுலக பிரமுகர்களும் பாராட்டினார்கள். மேற்கொண்டு கவனம் செலுத்தினால், அதிக தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று சொன்னார்கள். அதனால் லேட்டாக ரிலீஸ் ஆகிறது.
அதுவும் எங்கள் படக் குழுவினருக்கு நல்லதாகத் தோன்றியது. தற்போது இப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷனுக்காக ஜே.சதீஷ்குமார் வாங்கியுள்ளார். தேவையில்லாமல் இருந்த 25 நிமிட காட்சியை வெட்டியுள்ளோம். கதையோடு வரும் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் மட்டுமே பிடிக்கும். வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். அடுத்து 'ரம்மி', 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்' படங்களில் நடிக்க உள்ளேன்.
Post a Comment