‘மகாபாரதம்’ என் கனவுப் படம்: அமீர்கான்

|

Mahabharat On Big Screen Is Dream

மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். இது தனது கனவுப் படம் என்றும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.

தாரே ஜமீன் பார் படத்தை இயக்கி உலக அளவில் பேச வைத்தவர் பாலிவுட் நடிகர் அமீர்கான். நடிகராக இருந்தாலும் மஞ்சில் மஞ்சில், ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது தற்போது அமீர்கானுக்கு கை கொடுத்தது. இதேபோல் மகாபாரதம் இதிகாசத்தை இயக்கி நடிக்க இருக்கிறாராம்.

இது குறித்து கருத்து கூறியுள்ள அமீர்கான், நடிகராக எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. பீகோ, தூம்3 படங்களில் என் பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும். தவிர சத்யமேவ ஜெயதே 2 வேறு கைவசம் இருக்கிறது. இவற்றை முடித்து விட்டு மகாபாரதம் கதையை கையில் எடுக்கவேண்டும் என்றார்.

இதிகாச காவியத்தை செய்வது சாதாரண விசயமல்ல. அதற்கான இடங்கள், உடைகள் என பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு நாள் நிச்சயம் பெரிய திரையில் என கனவுத் திட்டமான மகாபாரதம் கதையை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அமீர்கான்.

அமீர்கான், கரீனாகபூர், ராணி முகார்ஜி ஆகியோர் நடித்துள்ள தலாஷ் படம் நவம்பர் 30ல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment