ஹீரோவுக்கு 9 மாதம் நடிப்பு பயிற்சி

|

9 month acting training for a hero காதல் அழகை பார்த்து வராது என்ற கருவுடன் படம் எடுப்பதாக கூறினார் இயக்குனர் நாகராஜ். 'தினந்தோறும் என்ற படத்தை இயக்கிய நாகராஜ் இயக்கும் புதிய படம் 'மத்தாப்பூ.  இதுபற்றி அவர் கூறியதாவது: எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நிம்மதியாக வாழ வேண்டும். அழகு மட்டும் இருந்தால் காதல் வந்துவிடாது. அதையும் மீறி  ஒரு ஈர்ப்பு இருந்தால்தான் காதல் வரும். உலக அழகியாகவே இருந்தாலும் அவரை மனதுக்கு பிடிக்காவிட்டால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சாதாரண பெண்ணாக இருந்தாலும் ஏதோ ஒன்று அவர் முகத்தை மறக்க முடியாமல் செய்துவிடும் அதுதான் காதல்.

இதை மையமாக வைத்துதான் இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஜெயன் ஹீரோ. இப்படத்தை பொறுத்தவரை சிறு சிறு பாவனைகள்கூட முக்கியம் என்பதால் ஜெயனுக்கு மேலும் பயிற்சி தரப்பட்டது. சுமார் 9 மாத பயிற்சிக்கு பிறகுதான் அவரை ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றேன். இது நல்ல பலன் தந்தது. காயத்ரி ஹீரோயின். கீதா, சித்தாரா, ரேணுகா, கிட்டி, இளவரசு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை, திருச்சி, கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஒளிப்பதிவு மாறவர்மன். இசை வேலாயுதம் (அறிமுகம்). தயாரிப்பு சுடலைக்கண் ராஜா. இவ்வாறு இயக்குனர் நாகராஜ் கூறினார்.
 

Post a Comment