மதுரை: கமலா திரையரங்க உரிமையாளர் விஎன் சிதம்பரம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 76.
மதுரை சின்னசொக்கி குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த வி.என்.சிதம்பரத்துக்கு சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வி.என்.சிதம்பரம் இன்று காலை இறந்தார்.
அவருக்கு கமலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மரணமடைந்த வி.என்.சிதம்பரம் செட்டியாரின் சொந்த ஊர் புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் என்ற கிராமம் ஆகும்.
சென்னையில் இவருக்கு சொந்தமாக கமலா மற்றும் கமலா மினி தியேட்டர்கள் உள்ளன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மிக நெருங்கிய நண்பர் இவர். தூங்காநகரம் படத்தில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நாளை (ஞாயிற்றுக் கிழமை) அவரது சொந்த ஊரான ராங்கியத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
Post a Comment