ரஜினி பிறந்த நாள் விழாவில் நமீதா, சரத்குமார், ராதாரவி!

|

Namitha Sarath Kumar Radha Ravi R

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 63வது பிறந்த நாள் விழா சரத்குமார் தலைமையில் நடக்கிறது.

இதில் நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் பங்கேற்கின்றனர். கோடம்பாக்கத்தின் எவர்கிரீன் கவர்ச்சிப் புயல் நமீதா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

சென்னை ரசிகர்கள் சார்பில் நடக்கும் இந்த விழா, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 13 வியாழக்கிழமை மாலை) சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதுவரை காணாத அளவு பிரமாண்ட கூட்டத்துடன் விழா நடக்கவிருக்கிறது. அனைத்து மாவட்ட ரசிகர்களும் அழைப்பிதழுடன் வரவிருக்கிறார்கள்.

வழக்கமாக இந்த மாதிரி விழாக்களுக்கு அனுமதி வழங்க யோசிப்பார் ரஜினி. ஆனால் இந்த முறை, ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை தட்டாமல், இந்த விழாவுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.

விழாவுக்கு நடிகர் சங்கத் தலைவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், எம்எல்ஏ சரத்குமார்தான் தலைமை வகிக்கிறார். நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, நடிகர் வாகை சந்திரசேகர், நடிகர், இயக்குநர் பாண்டியராஜன், இயக்குநர் பி வாசு உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்படும் கவர்ச்சி நடிகை நமீதா பங்கேற்கிறார். ரஜினிக்காக காலில் செருப்பணியாமல் நடிப்பேன், ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வேண்டாம் என்று கூறிவரும் நமீதாவுக்கு, ரஜினி விஷயத்தில் ஒரு சின்ன அங்கீகாரம் கிடைத்த திருப்தி இந்த விழா மூலம் கிடைத்திருக்கிறது.

 

Post a Comment