பிரபல பாலிவுட் வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணத்துக்கான முறையான சடங்குகள் நாளை தொடங்குகின்றன.
'டர்டிபிக்சர்' படத்தில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய வித்யாபாலனும் யுடிவியின் சித்தார்த் ராய் கபூரும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்தோடு இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.
இருவருக்கும் வருகிற 14-ந் தேதி மும்பையில் திருமணம் நடக்கிறது. புரோகிதர்களை வைத்து தமிழ் முறைப்படி திருமணம் நடக்கிறது.
திருமண சடங்குகள் நாளை தொடங்குகின்றனர். முதலாவதாக மணப்பெண்ணுக்கு மருதாணியிடும் சங்கீத் வைபவம் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்கிறார்கள். இதில் வித்யாபாலன் நடித்த படங்களில் இருந்து ஹிட் பாடல்களை தேர்வு செய்து இசைக்குழுவினர் பாடுகிறார்கள். வித்யாபாலன் நண்பர்களுடன் நடனம் ஆடுகிறார்.
முகூர்த்தம் எளிமையாக நடத்தப்படுகிறது. இதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து முகூர்த்த பட்டு புடவை வாங்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டெல்லி மற்றும் சென்னையில் நடத்த வித்யாபாலன் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment