கருப்பை கேன்சர்: மனீஷா கொய்ராலாவுக்கு ஆபரேஷன் முடிந்தது

|

மும்பை: பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று அவரது மேனேஜர் சுப்ரதோ கோஷ் தெரிவித்துள்ளார்.

manisha koirala cancer surgery successful
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற நியூயார்க் சென்றார். நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்தது.

இது குறித்து அவரது மேனேஜர் சுப்ரதோ கோஷ் கூறுகையில்,

நேற்று காலை 9 மணிக்கு மனீஷாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று அவரது குடும்பத்தினரிடம் இருந்து தகவல் கிடைத்தது. மனீஷாவுடன் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளனர். அவரது நெருங்கிய தோழியும் அவருக்கு துணையாக மருத்துவமனையில் உள்ளார் என்றார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த மனீஷா ராம் கோபால் வர்மாவின் பூட் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment