விஜய் டிவி வசமான 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'...

Star Vijay Bagged Annakodiyum Kodiveeranum Tv Rights

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

புதிய படங்களின் சேட்டிலைட் உரிமையை யார் கைப்பற்றுவது என்பதில் சேனல்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டியே நிலவுகிறது.

சன், கலைஞர், ஜெயா,ஜீ தமிழ், வேந்தர், விஜய் ஆகிய சேனல்கள் பலத்த போட்டிக்கிடையே படங்களை கைப்பற்றும். இதற்காகவே சன் டிவி சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகம் செய்ததோடு சேட்டிலைட் உரிமையை எளிதாக கைப்பற்றியது.

ஆட்சி மாறிய உடன் ஜெயா டிவியின் வசம் பெரும்பாலான படங்கள் சாய்ந்தன. சமீபத்தில் ரிலீசான விஸ்வரூபம் பல கட்டங்களைத் தாண்டி விஜய் டிவி வசமானது.

இந்த நிலையில் பாராதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

சன், விஜய்,ஜீ ஆகியவற்றிர்கிடையே ஏற்பட்ட போட்டியில் கடைசியில் விஜய் டிவி வென்றுள்ளது.

 

லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது!- குமுதத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

Hc Orders Magazine Not Publish News On Lakshmi Rai

நடிகை லட்சுமி ராயைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது என்று குமுதம் வாரப் பத்திரிகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகையான லட்சுமி ராய் சொன்னதாகக் கூறி, குமுதம் ஒரு பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் ஒரே அறையில் ஹீரோவுடன் ஹீரோயின் தங்கினால் தவறில்லை என்று லட்சுமி ராய் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆட்சேபித்த லட்சுமி ராய், தான் சொல்லாத ஒன்றை குமுதம் தவறாக வெளிட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.

இதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி தன்னைப் பற்றி அந்தப் பத்திரிகை எதுவும் எழுதக் கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, "குமுதம் பத்திரிகை லடசுமி ராயைப் பற்றிய செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதாக" தீர்ப்பு வழங்கினார்.

 

அம்பிகா - ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் நட்சத்திர ஓட்டலாகிறது!

Ambika Radha S Ars Studio Will Be Converted Star Hotel

சென்னை: நடிகை அம்பிகா-ராதாவுக்கு சொந்தமான ஏ.ஆர்.எஸ். கார்டன் ஸ்டூடியோ, நட்சத்திர ஓட்டலாக மாறுகிறது.

சென்னையின் பிரபல ஸ்டுடியோக்களில் ஒன்று ஏஆர்எஸ். அம்பிகா, ராதா, அவர்களின் அம்மா சரஸ்வதி பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஸ்டுடியோ.

சென்னை வளசரவாக்கத்தில் ஓரளவு பெரிய நிலப்பரப்பில் இந்த ஸ்டுடியோ உள்ளது. தமிழின் பல முக்கிய படங்கள், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிக முக்கிய இடமாகத் திகழ்ந்தது ஏஆர்எஸ்.

சென்னையில் பட ஸ்டுடியோக்கள் படிப்படியாக மூடப்பட்டு வந்தபோதும், ஏவி.எம், பிரசாத் ஆகிய இரு ஸ்டுடியோக்கள் மட்டும் மூடப்படாமல் உள்ளன. இந்த லிஸ்டில் ஏஆர்எஸ் ஸ்டுடியோவையும் சொல்லலாம்.

1984-ம் வருடம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. ஏராளமான படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளியூர்களுக்கு மாறிவிட்டதால், டெலிவிஷன் தொடர்கள்தான் இந்த ஸ்டுடியோவை இயங்க வைத்துக் கொண்டிருந்தன.

எனவே ஏ.ஆர்.எஸ். கார்டனில் உள்ள படப்பிடிப்பு நிலையங்களை இடித்து விட்டு, அந்த இடத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடைபெறுகிறது. நடிகை ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையில் ஏற்கனவே ஒரு நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. நட்சத்திர ஓட்டல் தொழிலில் அவருக்கு அனுபவம் இருப்பதால், ஏ.ஆர்.எஸ். கார்டனையும் நட்சத்திர ஓட்டலாக மாற்ற ராதா முடிவு செய்துள்ளாராம்.

 

பவர் ஸ்டார் சீனிவாசனின் பத்தரை கெட்-அப்!

Power Star Ten Half Getups

வரவிருக்கும் ஒரு படத்தில் பத்தரை கெட்டப்பில் நடிக்கிறாராம் சித்தா டாக்டர் சீனிவாசன்.

கிட்டத்தட்ட தன் பெயரையே பவர் ஸ்டார் என மாற்றிக் கொண்டுவிட்ட சீனிவாசன் இப்போது ஒரு டஜன் வெளிப்படங்களில் நடித்து வருகிறார்.

இதுதவிர, சொந்தத் தயாரிப்பாகவே 10 படங்களை வைத்துள்ளார். இந்தப் படங்கள் வருமோ வராதோ... ஆனால் வெளிப்படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலும் இவர் ஐட்டாம் பாட்டுக்கோ, காமெடி வேஷத்திலோதான் தோன்றுகிறார்.

அப்படி ஒரு படம்தான் 'சும்மா நச்சுன்னு இருக்கு'.

இந்தப் படத்தை ஏ வெங்கடேஷ் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டறை படம் இயக்கிய சினேகா பிரிட்டோவின் பெற்றோர் விமலா ராணி மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் டாக்டர் சீனிவாசன் பத்தரை கெட்டப்பில் நடிக்கிறாராம்.

அதென்ன பத்தரை கெட்டப்?

"மொத்தம் பத்து வேஷத்துல நடிக்கிறேன். ஒரு வேஷத்துல குழந்தையா தோன்றுகிறேன். அதாவது என்னுடைய தலை, குழந்தை உடம்பு. அதான் பத்தரை கெட்டப்", என்றார் சீனிவாசன்.

அடிக்கடி சொல்லாதீங்க, கமல் ரசிகர்கள் கோச்சுக்கப் போறாங்க!!

 

'லட்டு': பேசித் தீத்துக்கங்க - பாக்யராஜ், சந்தானத்துக்கு நீதிமன்றம் அட்வைஸ்!

Hc Advises Bagyaraj Santhanam Settle

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதைத் திருட்டு விவகார வழக்கில் இரு தரப்பும் பேசி சமரச தீர்வு காணவேண்டும், என்று உயர்நீ்திமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தானம், ‘பவர் ஸ்டார்' சீனிவாசன், நடிகை விசாகா ஆகியோர் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா'. இந்த படத்தின் கதை அப்படியே பாக்யராஜின் புகழ்பெற்ற படமான இன்று போய் நாளை வா படத்தின் கதையாகும். தன்னுடைய அனுமதி இல்லாமல் கதை கருவை திருடி படமெடுத்துவிட்டார்கள் என்று பாக்யராஜ் புகார் கூறினார்.

இதற்குக் காரணமான சந்தானம், ராமநாராயணன், புஷ்பா கந்தசாமி ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாக்யராஜ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் நடவடிக்கை கோரி மனு செய்தார் பாக்யராஜ்.

நீதிபதி கிருபாகரன் தலைமையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி, பாக்யராஜ் மற்றும் சந்தானம் ஆகிய இருதரப்பும் சமரச தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி சமரசமாகாவிட்டால் மார்ச் 6-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.

 

பாலிவுட் படங்களில் பிஸியாகும் தமன்னா... அடுத்து அக்ஷய் குமாருடன் ஜோடி போடுகிறார்!

Tamanna Signs Her Next Big Project

தமிழில் கொடி கட்டிப் பறந்து, ஒரு காதல் விவகாரத்தால் தெலுங்கு தேசத்துக்குப் போன தமன்னா, இப்போது இந்தியில் ஏக பிஸி.

தமன்னாவின் முதல் இந்திப் படம் ஹிம்மத்வாலா. இதில் அவருக்கு ஜோடி அஜய் தேவ்கன். சஜித் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் தமன்னா கங்னம் ஸ்டைலில் நடனமாடி அசத்தியுள்ளார். கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளே மிரளும் அளவுக்கு தாராளம் காட்டியுள்ளாராம்.

இதன் விளைவு, தமன்னாவைத் தேடி மிகப் பெரிய அடுத்த வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி அக்ஷய் குமார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை டிப்ஸ் நிறுவனத்தின் ரமேஷ் தௌரானி தயாரிக்க, சஜித் - பர்ஹாத் இரட்டையர்கள் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்குகிறது.

இப்போதைக்கு தமன்னா தமிழில் ஒரே ஒரு படத்தில்தான் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி அஜீத்!

இங்கிருந்து போன அசின் உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடிக்க போராடி வரும் நிலையில், போன வேகத்தில் அடுத்தடுத்து இரு பெரிய படங்களில் தமன்னா நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் பிறந்தது வட இந்தியாவில் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை.

 

'சிஎம்'-ஐ இயக்கும் ஆக்ஷன் கிங்!

Arjun Direct Cm

கொஞ்ச நாளாக தலைகாட்டாமலிருந்த இயக்குநர் அர்ஜூன், ஒரு இடைவெளிக்குப் பிறகு வெளியில் வருகிறார்... தனது பத்தாவது படத்தை இயக்குகிறார்!

நடிகராக மட்டுமல்ல... ஒரு இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் ஆக்ஷன் கிங் எனப்படும் அர்ஜூன். தேசபக்திப் படங்கள், காதல், குடும்பப் படங்கள் என விதவிதமாக ஆக்ஷன் கலந்து கொடுத்தவர்.

தனது கேரியர் டல்லடித்த நேரத்தில், அதை சரிசெய்ய 1992-ல் இவர் இயக்கிய முதல் படம் சேவகன். அதில் இவர்தான் ஹீரோ. படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதாப் படத்தை இயக்கினார். பரவாயில்லை எனும் அளவுக்குப் போனது.

1994-ல் இவர் இயக்கிய ஜெய் ஹிந்த் பெரும் வெற்றி பெற்றது. இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் மதராஸி எனும் படத்தை தமிழ் - தெலுங்கில் இயக்கினார்.

அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.

இப்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக ஒரு படம் இயக்கி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சிஎம் - காமன் மேன் எனத் தலைப்பு வைத்துள்ளார்.

இந்த ஆண்டு அர்ஜூன் நடித்த படங்கள் கடல் மற்றும் வனயுத்தம். வணிக ரீதியாக இவை சரியாகப் போகவில்லை. இப்போது மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் மூன்று ஹீரோக்களுள் ஒருவராக நடித்து வருகிறார்.

 

மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு...

A Meet With Manivannan S Heroine Komal Sharma

ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தர வரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம்... என்று அசத்திய விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா, இப்போது கோடம்பாக்கத்தையும் ஒரு கை பார்க்க களமிறங்கியுள்ளார்.

இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ - அமைதிப்படை 2 படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமனுக்கு மகளாக அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தவரை படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.

ஸ்போர்ட்ஸ் வுமனாக இருந்தவர் எப்படி நடிக்க வந்தீர்கள்... நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..?

விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதான் நடிக்க வந்துவிட்டேன்.

நாகராஜசோழனில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன். வீட்டில் அப்பா அம்மாவுக்கு மிகவும் அடங்கிய பெண்ணாக நடிக்கும் அதே வேளையில் அநீதி கண்டு பொங்கும் வீரத் தமிழ்ப் பெண்ணாக என் பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்... படத்தைப் பார்க்கும் சகோதரிகள் தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல உணருவார்கள்...

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ்.....எனது தாய்மாமனாக இயக்குனர்- நடிகர் சீமான் நடித்திருக்கிறார்...

எனக்கு அவரைச் சிறந்த இயக்குனராகத்தான் தெரியும். ஆனால் படப்பிடிப்பின் போதுதான் தெரிந்தது அவர் அற்புதமான நடிகரும் கூட என்பது... அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன்...

இயக்குனர் மணிவண்ணனைப் பற்றி...

அவரை திறமைகளின் சிகரம் எனலாம்...அவரது 50 வது படம் , இன்னும் முதல் படத்தை இயக்குவதைப் போல அவ்வளவு சிரத்தை.. அவ்வளவு சுறுசுறுப்பு..எல்லாவற்றுக்கும் மேல் ஜனரஞ்சகமாக யோசிக்கும் ஆற்றல் அபாரம்... செட்டுக்கு வெளியே அவர் மிகவும் இயல்பான ஜாலியான மனிதர்... செட்டுக்குள் வந்துவிட்டாலோ செம ஸ்டிரிக்ட்... அவரது செட் மிகவும் டிசிப்ளின் ஆக இருக்கும்... பெர்பெக்‌ஷன் வரும் வரை விடமாட்டார்... அதே நேரம் அவரவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதை அருமையாக விளக்கிச் சொல்லி அவர்களை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவார்... திறமைசாலிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக வெளிக் கொணர்வதில் வாங்குவதில் அவருக்கு நிகர் அவரே..

படப்பிடிப்பின் போது ஏதாவது சுவையான அனுபவம்...

நான் சைவம்.... அசைவ உணவுகளைக் கண்டாலே அலர்ஜி... இதை அறிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் படப்பிடிப்பின் போது அசைவ உணவுகள் வரும் இடங்களில் அதன் வாசனை என்னை அணுகாதவாறு பெர்பியூம் அடித்து விடுவார்... நான் ஒரு சாதாரண நடிகைதான். இருந்தாலும் அந்த வாசனையால் நான் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவ்வாறு அவர் சிரத்தை எடுத்துக் கொண்டதை நிஜமாகவே மறக்க முடியாது...

நாகராஜ சோழன் ஸ்பெஷல் என்ன...

இயக்குனர் மணிவண்ணனின் படங்களை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லலாம்... அவரது அன்றைய டயலாக்குகள் இன்றும் இளமையாக இருக்கின்றன.. இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்திப் போகின்றன...

இந்தப் படத்தில் இதுவரை இருக்கும் அரசியலை அவருக்கு உரித்தான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்... யாரையும் புண்படுத்தாமலும் யாரையும் சுட்டிக்காட்டாமலும் பொதுவான அரசியலைச் சொல்லியிருக்கிறார்.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முழு நீளப்பொழுது போக்கோடு அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து சத்யராஜுடன் இரண்டு படங்கள்...?

முதலில் சத்யராஜ் சாரைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்... ஒரு ஜூனியர் என்றும் பார்க்காமல் சகஜமாக அவர் என்னை நடத்தினார்... மேலும் அவரைப் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது தூர இருந்தே நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது. மற்றபடி அவரது திறமையைப் பற்றியோ டைமிங்கினைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை... அவரது 200 வது படமான நாகராஜ சோழன் படத்தில் அவருடன் நடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இரண்டு வருடத்தில் அவருடன் இரண்டு படங்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வுதான்.

இரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்கள்... ஏன் அதிகமாக ஒப்புக் கொள்ளவில்லை?

நான் நல்ல கதைகளில், கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன். எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் எனபது முக்கியமில்லை... எனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.. அது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறதா என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

சவாலான கதாபாத்திர அமைப்புடன் கூடிய முழு நீளக் கதாநாயகியாக நடிக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது... பார்க்கலாம்.

விளையாட்டு வீராங்கனை - நடிகை... என்ன வித்தியாசத்தை உணர்கிறார்கள்?

விளையாட்டு என்பது அதிமாக உடலுழைப்பைச் சார்ந்திருக்கிறது... மனதளவில் ஜெயிக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் போதுமானாது...

நடிப்பு என்பது முழுக்க முழுக்க வெளிக்காட்டும் பாவங்களைச் சார்ந்து இருக்கிறது... உடல்மொழியுடன் சிறந்த முகபாவனைகளையும் வெளிப்படுத்த வேண்டும்... மேலும் நடிக்கும் போது நம்மால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களாக வாழமுடியும்... அதற்கு நடிப்பு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறது...

விளையாட்டு வீரராக இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்தையும் உடலமைப்பையும் சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது!

 

கடல் தெலுங்கில் ரூ 98 கோடி குவித்துவிட்டதாம்... - ஒரு சூப்பர் கப்சா!!

A Mega Lie On Kadali Box Office Collection

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் தமிழில் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்தப் படத்தில் ரூ 17 கோடி நஷ்டம் என்று கூறி, மன்னன் பிலிம்ஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது.

இந்தப் புகாரால், மிரண்டு போன மணிரத்னம் தன் வீட்டுக்கு போலீஸ் காவலை பலப்படுத்துமாறு கோரியுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கில் கடலி என்ற பெயரில் வெளியான இதே படம் வசூலைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துள்ளதாக தெலுங்கு இணையதளங்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம் தெலுங்கின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களான நான் ஈ ரூ 120 கோடியும், மகதீரா ரூ 90 கோடியும் குவித்துள்ளன. இந்த சாதனையை இதுவரை வேறு படங்கள் முறியடிக்கவில்லை என்பதுதான் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.

தமிழிலிருந்து தெலுங்குக்கு டப் செய்யப்பட்ட படமான ரோபோ ரூ 71 கோடியை ஈட்டியது டப்பிங் படங்களில் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் இவை எல்லாமே வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்களில் நிகழ்ந்த வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடலி என்ற பெயரில் வெளியான ஒரு டப்பிங் படம் 27 நாட்களில் 98 கோடியை வசூலித்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன சில இணையதளங்கள். கடலி தெலுங்கில் படு தோல்வியைத் தழுவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த காமெடி அரங்கேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

பாத்துப்பா.. இப்படிப்பட்ட அதிர்ச்சியையெல்லாம் மணிரத்னம் தாங்கமாட்டார் என கமெண்ட் அடிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!

 

நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Delhi Ganesh Suffers Heart Attack

சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நாடக நடிகராக இருந்து திரைப்பட நடிகராக உயர்ந்தவர் டெல்லி கணேஷ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த அட்டகாசமான நடிகர். ஆரம்பத்தில் நாயகனாக நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திரம், வில்லத்தனம், காமெடி என கலவையாக மாறி அதகளம் செய்தவர்.

எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக பரிமளிக்கும் அபாரமான நடிகர். இவர் குடும்பத்துடன் ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார்.

62 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலைமை ஸ்திரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விஜய்க்கு இன்னும் ஒரு நாயகி... கடுப்பில் அமலா!

Ragini Nandwani Is The Second Heroine In Thalaivaa

இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் கை கைகோர்த்துள்ள தலைவா படத்தில் மேலும் ஒரு நாயகியை புதிதாக சேர்த்துள்ளனர். அவர் ராகினி நந்வானி. டேராடூன் டைரி படத்திலும் சில டிவி தொடர்களிலும் நடித்தவர். இந்த திடீர் சேர்க்கையால் படத்தின் முதல் நாயகி அமலா பால் டென்ஷனாகியுள்ளாராம்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது.

விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தக் கதையில் ஒரே ஒரு ஹீரோயின்தானாம். ஆனால் கதையில் லேசான மாற்றம் செய்து, மும்பை செல்லும் விஜய் அங்கும் ஒரு பெண்ணை காதலிப்பது போல மாற்றியுள்ளார்களாம்.

இந்த வேடத்துக்குதான் ராகினி நந்வானி என்ற மும்பை நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய்க்குப் பிடித்த நாயகியாக இந்த ராகினி தேர்வாகியுள்ளது, அமலா பாலை டென்ஷனாக்கியுள்ளது. தமது காட்சிகள் குறைக்கப்பட்டு விடுமோ என்பதால் இந்த டென்ஷனாம்!

 

நோ அப்ஜெக்சன் குடுக்க ‘நோ’ சொன்ன பவர் ஸ்டார்…

Power Star Tried Stop Sundarapandian Release

சுந்தரபாண்டியன் படத்தில் பவர் ஸ்டாரின் போஸ்டரை கிழிப்பது போல ஒரு காட்சி வரும். இதற்கு சென்சார் அதிகாரிகள் பவர்ஸ்டாரிடம் ‘நோ அப்ஜெக்சன்' சர்டிபிகேட் வாங்கி வரும்படி சுந்தரபாண்டியன் இயக்குநரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு நோ சொன்ன பவர், அரசியல் பிரபலத்தின் பேச்சை கேட்டு உடனே சர்ட்டிபிகேட் கொடுத்தாராம்.

உசிலம்பட்டி பகுதிகளில் கார்த்திக் நடித்த படத்தின் போஸ்டர்கள்தான் ஒட்டவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அந்த ஊரில் பவர்ஸ்டார் நடித்த லத்திகா படத்தின் போஸ்டரை ஒட்டியிருப்பார்கள்.

"ஏய் யாரு போட்டாவை எங்க வந்து ஒட்டியிருக்க"? என்று கூறியபடி உசிலம்பட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசன் போட்டோவை கிழிப்பார் ஒருவர்.

இது சுந்தரபாண்டியன் படத்தில் வரும் ஒரு காட்சி.

படம் முழுவதும் பார்த்துவிட்டு டைரக்டரிடம் கை குலுக்கிய அதிகாரிகள் 'படம் சூப்பர். கண்டிப்பா ஹிட்டாகும்' என்றெல்லாம் நம்பிக்கை வார்த்தைகளை இறைத்துவிட்டு ஒரே ஒரு நிபந்தனை போட்டார்கள்.

'படத்தின் ஆரம்பத்தில் டாக்டர் சீனிவாசனின் போஸ்டரை கிழிக்கிற மாதிரி ஒரு ஷாட் வருது. அதனால் அவருகிட்ட ஒரு நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துருங்க!'என்று கூறிவிட்டனர்.

'இதுக்கு போய் டென்ஷன் எதுக்கு. நேராவே பவர் ஸ்டாரிடம் கேட்டால் கொடுத்துருவாரு' என்று சில நண்பர்களும், 'கொடுக்காட்டி என்ன பண்ணுவே?' என்று பல நண்பர்களும் குழப்ப... தனக்கும் பவருக்கும் பொதுவான நண்பர் ஒருவருக்கு போன் அடித்து குழப்பத்தை கொட்டினார் ஹீரோ சசிகுமார்.

அந்த நண்பர் பவரிடம் பேசவே, என் போஸ்டரை கிழிப்பாய்ங்க. நான் நோ-அப்ஜெக்ஷன் தரணுமா? தரவே முடியாது. அந்த படத்தை எப்படி ரிலீஸ் பண்றாங்கன்னு பார்க்குறேன்' என்று சவால் விட்டாராம் அவர்.

இதென்னடா வம்பா போச்சு என்று அதிர்ச்சியுற்ற நண்பர், அடுத்த வினாடியே விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு போன் அடிக்க, 'பிரச்சனைய விடுங்க. நான் அவருகிட்ட நம்ம வன்னியரசை பேச சொல்றேன்' என்றவர் அவரைவிட்டு பவருக்கு போன் அடிக்க... கொஞ்ச நேரத்திலேயே நண்பர் லைனுக்கு வந்தாராம் பவர்.

'இந்த சின்ன விஷயத்துக்கு அண்ணன் வரைக்கும் போயிட்டீங்களே... நேரா ஆபிஸ் போங்க. என் பி.ஏ. இருப்பார். கையெழுத்து போட்ட என் லெட்டர் பேட் ஒண்ணு கொடுப்பாரு. என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க. 'நோ-அப்ஜெக்சன் என்றாராம்.

அன்றைக்கு நோ அப்ஜெக்சன் சொன்ன பவர் ஸ்டார் இப்போது சசிகுமார் கூட நடிக்க ஆசைப்படுகிறாராம்.

போஸ்டரை கிழிச்சி ஹீரோவாக்கிட்டாங்களோ?

 

மீண்டும் முருகதாஸுடன் இணைகிறார் விஜய்.. ஆனால்..!

Murugadass Confirms His Next With Vijay

மீண்டும் இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் இணைகிறார் விஜய். ஆனால் இந்தப் படம் துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்காது என உறுதியாக முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய படம் துப்பாக்கி. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைப் படைத்துவிட்டதாக அவர்களே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இருவரும் இணைந்து மீண்டும் படம் செய்யப் போவதாக செய்திகள் கிளம்பின.

இதுகுறித்து இயக்குநர் முருகதாஸிடம் விசாரித்தபோது, "இருவரும் மீண்டும் இணையும் திட்டமிருக்கிறது. ஆனால் நிச்சயம் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இருக்காது," என்றார்.

முருகதாஸ் இப்போது துப்பாக்கியை பிஸ்டல் என்ற பெயரில் இந்தியில் இயக்குகிறார்.

விஜய் தலைவா, ஜில்லா என இரு படங்களில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கைவசமுள்ள படங்களை முடித்ததும் புதிய படத்தைத் துவங்கப்போகிறார்களாம்.

 

கடல் படத்தால் ரூ.17 கோடி நஷ்டம்- மணிரத்னம் மீது போலீஸில் புகார்!

Distributor Files Police Complaint On Manirathnam

சென்னை: மணிரத்னம் இயக்கி வெளியிட்ட கடல் படத்தால் ரூ 17 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ‘கடல்' படம் கடந்த 1-ந்தேதி ரிலீசானது. இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ளனர்.

இந்த படத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் கூறினார். மணிரத்னம் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்.

இன்று காலை விநியோகஸ்தர் மன்னன் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில், "‘கடல்' படத்தை வாங்கி விநியோகிப்பதற்கு முன்பு அதனை திரையிட்டு காட்டும்படி கோரினேன். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்பிக்க இயலாது என மணிரத்னம் மானேஜர் கூறிவிட்டார். மணிரத்னத்துக்காக படம் ஓடும் என்று நம்பி வாங்கலாம் என்று கிருஷ்ணா என்னிடம் கூறினார்.

இதனால் ரூ.20 கோடி கொடுத்து ‘கடல்' படத்தை வாங்கினேன். ஆனால் ரூ.3 கோடிதான் கிடைத்தது. மணிரத்னத்தை சந்தித்து நஷ்டம் பற்றி முறையிட பலதடவை முயற்சித்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. கிருஷ்ணா மிரட்டுகிறார். எனவே தொகையை வாங்கித்தர வேண்டும். கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது!

Big Honour Actress Trisha   

நடிகை த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளருக்கான விருதினை வழங்குகிறது ஒரு பேஷன் பத்திரிகை.

தமிழ், தெலுங்கு சினிமாவில் பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.

இப்போதும் ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.

த்ரிஷாவின் திரையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பெண் சாதனையாளர் விருதினை வழங்குகிறது ஜேஎப்டபிள்யூ பத்திரிகை.

மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது த்ரிஷாவுக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்வையும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

த்ரிஷாவுடன் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, பாடகி சுஜாதா உள்ளிட்டோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

 

நல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்!! - சினேகா

Sneha Wants Play Characters Like Amuthavalli   

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்த நடிக்க நான் தயார் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.

பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது, கடைகள் திறப்பது என்று பிஸியாக உள்ளார் சினேகா.

சமீபத்தில் சினேகா நடித்த ‘ஹரிதாஸ்' படம் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகள் குவிகன்றன.

இது அவரது திரைவாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.

தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக சினேகாவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து சினேகா கூறுகையில், "இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. திருமணம் உறுதியானபோது ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு வெளியானது.

இதில் நான் ஏற்ற அமுதவல்லி வேடம் ரொம்பப் பிடித்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படமாக இது அமைந்துள்ளது.

ஹரிதாஸ் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். இதுபோன்ற படங்களுக்கே இனி முன்னுரிமை," என்றார்.

 

தனுஷ் நாயகி நஸ்ரியா நாசிம் நடிக்கும் புதிய படம் நேரம்!

Nazriya Nazim Make Her Debut Neram

சற்குணம் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துவரும் நஸ்ரியா நாசிம், அந்தப் படம் வெளியாகும் முன்பே இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார். அது 'நேரம்.' தனுஷ் படத்துக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது.

வின்னர் புல்ஸ்ஃபிலிம்ஸ் மற்றும் கோரல் க்ரூப் விஸ்வநாதன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை, டிஎப்டி முடித்து ஐந்துக்கும் மேற்ப்பட்ட குறும்படங்கள், விளம்பரப்படங்கள் மற்றும் மியூசிக் வீடியோ ஆல்பம் செய்த அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குகிறார்.

சென்ற வருடம் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய யுவ் என்னும் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் ஊடகங்கள், இனணயதளங்களில் மிகபெரிய வரவேற்பைப் பெற்றதும், சோனி நிறுவனம் வெளியிட்ட முதல் மலையாள மியூசிக் விடியோ ஆல்பம் யுவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நிவின் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னனி கதாநாயகர்களில் ஒருவர். சென்ற வருடம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த 'தட்டத்தின் மரியத்தில்' என்னும் படம் மூலம் மலையாள திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நிவின், நேரம் படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார்.

அல்ஃபோன்ஸ் புத்திரனின் மியூசிக் விடியோ ஆல்பத்தில் நடித்த நஸ்ரியா நாசிம்தான், நேரம் படத்தின் நாயகி.

இந்த மியூசிக் விடியோ ஆல்பம் பார்த்துதான் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படத்திலும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் இவரை நாயகியாக்கினார்களாம்.

நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று நல்ல நேரம், இன்னோன்று கேட்ட நேரம். நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான். கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியை அடிப்படையாக வைத்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன்.

சென்னை மந்தைவெளி பகுதியை சுற்றி கதைகளம் அமைந்திருப்பதால், அந்தந்த பகுதிகளிலே படத்தை எடுத்திருப்பது சிறப்பம்சமாகும்.

இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ஆனந்த் சி சந்திரன். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

 

என்ன, விஜயின் துப்பாக்கி வசூல் ரூ.180 கோடியா?!

Vijay S Thuppakki Makes 180 Crore

சென்னை: விஜய் நடித்த துப்பாக்கி படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக ஈராஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படம் ரிலீஸாகி 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி படம் இந்தியாவில் மட்டும் ரூ.180 கோடி வசூலித்துள்ளதாக ஈராஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த நான்காவது தமிழ் படம் என்ற பெருமையை துப்பாக்கி பெற்றுள்ளது.

துப்பாக்கி படம் நவம்பர் மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் 1,500 திரைகளில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் படம் ரிலீஸான அன்றே ரூ.9.25 கோடி வசூலித்தது. ரிலீஸான முதல் வாரம் உலகம் முழுவதும் ரூ.65.32 கோடி வசூல் செய்தது என்று செய்திகள் வெளியாகின.

துப்பாக்கி ரூ.100 கோடி வசூல் செய்தது என்பதையே நம்ப முடியாத நிலையில் பலர் இருக்க, அந்த படம் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூலிச்சிருச்சாமே!!!

Kamal Haasan Starts 200 Crore Club

நியூ ஜெர்சி: கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் நாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸான கதை உலகம் அறிந்ததே. ஆனால் அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸான விஸ்வரூபம் நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கிலாந்தில் இன்னும் விஸ்வரூபத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபத்தில் கமல் மனைவியாக நடித்த பூஜா குமார் நியூ ஜெர்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

கமல் ஹாசன் விஸ்வரூபம்-2 வேலையில் மும்முரமாக உள்ளார். இந்த ஆண்டே விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்ய அவர் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பவர் ஸ்டார் முத்தம் கொடுத்ததால் கோபித்துக் கொண்ட நடிகை!

Actress Irked Over Powerstar Srinivasan Sudden Kiss   

அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார்.

நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளுடன் இரவுப் பின்னணியில் ஆடிக் கொண்டிருந்தார் சீனிவாசன்.

ஒரு கட்டத்தில் நடனமாடிக் கொண்டிருந்த சீனிவாசன், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு, உடன் ஆடிய அழகி ஒருவருக்கு முத்தம் கொடுத்துவிட்டார்.

பல் பட்டுவிட்டதோ என்னமோ.. அந்த நடிகை ஏக கோபத்துடன் சத்தமில்லாமல் திட்டிக் கொண்டே, இன்னொரு முறை இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தார்.

ஆனால் பவரோ இதற்கெல்லாம் அசருவதாக இல்லை. சிரித்துக் கொண்டே, அதே பெண்ணின் மீது கைபோட்டபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தார். முதலில் உர்ரென்றிருந்த அந்தப் பெண், பின்னர் சகஜமாகி சீனிவாசன் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்!

A new actress has irked over Powerstar Srinivasan's sudden kiss during the shooting of Azhagan Azhagi.

 

சோனியா காந்தி கதை: பிரியாமணியை விசாரித்த உளவுத்துறை

Priyamani Playing Sonia Gandhi Chandi

பிரியாமணி தெலுங்கில் நடிக்கும் "சாண்டி" படம் சோனியாவைப் பற்றியது என்ற தகவல் கசிந்துள்ளதால் உளவுத்துறை விசாரித்து முழு ஸ்கிரிப்டையும் வாங்கிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.

சாருலதா படமும் கைவிட்டு விட்டதால் தமிழில் சரியான பிரேக் இல்லாத பிரியாமணி தெலுங்கில் கவனம் செலுத்தினார். அவருக்கு கிடைத்த சாண்டி திரைப்படம் பட பூஜையில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று கிசுகிசுக்கப்பட்டது. ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும் கெட் அப்பிலேயே வந்து கிசுகிசு செய்தியை உறுதி செய்தார்.

அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. இந்த தகவல் டெல்லிக்கு போகவே விசாரித்து தகவல் அனுப்புமாறு ஆந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

பெண் அரசியல்வாதி

"சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக தெரியாது" என்று பிரியாமணி கூறியுள்ளார். இயக்குனர் சமுத்திராவோ எதற்கு வம்பு என்று படத்தின் ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார் உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

"இது அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் சமுத்ரா. ஆந்திர அரசியலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்"

"ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள். கட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின் தலைவியாகிறார். தனது புத்தி கூர்மையாலும், ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை என்கிறார் சமுத்ரா.

 

விஜயின் ஜில்லாவுக்கும் அஜீத்தின் மங்காத்தாவுக்கும் என்ன தொடர்பு?

What S The Connection Between Jilla Mankatha

சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கும் அஜீத் குமாரின் மங்காத்தாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

விஜய் நடிக்கவிருக்கும் ஜில்லா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இந்த படம் மூலம் மீண்டும் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால். துப்பாக்கியில் தான் பெயருக்கு அவ்வப்போது வந்துவிட்டு போனார். இந்த படத்திலாவது அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இந்நிலையில் ஜில்லா குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அஜீத்தின் மங்காத்தா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த மகத் ஜில்லா படத்தில் விஜயின் தம்பியாக நடிக்கிறாராம். நேசன் இயக்கும் இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலும் உள்ளார்.

இதற்கிடையே மகத் தெலுங்கில் பியா பாஜ்பாயுடன் சேர்ந்து பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

லைஃப் ஆப் பைக்கு ஆஸ்கர்... சந்தோஷத்தில் மிதக்கும் புதுவை மாணவன்!

புதுவை: இயக்குநர் ஆங் லீயின் லைஃப் ஆப் பைக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்ததை மகிழ்ச்சி பொங்க அனைவருக்கும் சொல்லி வருகிறான் ஒரு சிறுவன். அவன் பெயர் கணேஷ் கேசவ்.

லைஃப் ஆப் பையில் நடித்த சிறுவன்தான் இந்த கணேஷ் கேசவ். புதுவை ஆச்சார்யா பள்ளியை சேர்ந்த மாணவன் கணேஷ் கேசவ்வை இயக்குனர் ஆவ்லீ டூப்பாக பயன்படுத்தி உள்ளார். இன்னும் சில காட்சிகளில் கதாநாயகனுடன் பள்ளியில் பயிலும் சக மாணவராகவும் கணேஷ் கேசவ் நடித்துள்ளார்.

'லைப் ஆப் பை' படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் அந்த படத்தில் பங்கேற்ற முறையில் சக மாணவர்களும் ஆசிரியர்களும், நண்பர்களும் கணேஷ் கேசவ்விற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்களாம். தான் நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மாணவன் கணேஷ் கேசவ்வை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. இதை அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறான் சிறுவன் கணேஷ்.

life pi actor enjoys oscar winning
கணேஷ் கேசவ் இதுகுறித்துக் கூறுகையில், "புதுச்சேரியில் 'லைப் ஆப் பை' படக்குழுவினர் படத்தில் நடிக்க பல மாணவர்களை அழைத்தனர். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். அப்போது கதாநாயகனின் சிறுவயது தோற்றத்தில் நடிக்கும் மாணவரும் நானும் ரஇரட்டையர்கள்போல் இருந்தோம்.

இதனால் இயக்குனர் என்னை 'டூப்பாக' நடிக்க வைத்தார். அதோடு என்னை கதாநாயகனின் மாணவ பருவ படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் எல்லாம் அவருக்கு பதிலாக எப்போதும் என்னை வைத்திருந்தனர்.

எனக்கு விஞ்ஞானியாக விருப்பம் உள்ளது. ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் நடிக்கவும் ஆசையாக உள்ளது," என்றார்.

 

அமெரிக்காவில் இளையராஜாவின் ராஜாங்கம் - ரசிகர்கள் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம்!

நுவர்க்(யு.எஸ்): நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் பிரம்மாண்டமான ப்ருடென்ஷியல் அரங்கில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

ஐந்து மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் வெளிவந்த தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம்பெற்றன.

ஏற்கெனவே கனடாவில் சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு வந்திருந்த இளையராஜா, நுவர்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இன்னும் பிரமாதப்படுத்திவிட்டார்.

ilayaraajaa s us concert an unforgettable experience

எஸ்பிபியுடன் மனோவும் சித்ராவும்

எஸ்பி பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர். சுமார் 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் உடன் இசைத்தனர்.

மாலை ஏழு மணிக்கு ஆரம்பமான கச்சேரி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவு பெற்றது. ஐந்து மணி நேரமும் மேடையிலேயே நின்று கொண்டு இசை ராஜாங்கம் நடத்தினார் இளையராஜா. பத்து நிமிடம் மட்டுமே சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்டார். ஆனால் நிகழ்ச்சி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது.

இசையுணர்ச்சியுடன் இளையராஜா

இளையராஜா இசையை எந்த அளவு நேசிக்கிறார், சுவாசிக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் எடுத்துக்காட்டாக அமைந்தது. நடுவில் சில இசைக்கலைஞர்கள், ஈடுகொடுத்து வாசிக்க முடியாமல் போனது. பெரும்பாலான ரசிகர்களுக்கு அதை தெரிந்து கொள்வது கூட இயலாது. ஆனாலும், அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் இளையராஜா.


'உங்களுக்கு தரமான இசையை தரவேண்டும் என்ற காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இசைக் கலைஞர்களுக்கு நோட்ஸ் வழங்கி பயிற்சி செய்கிறோம். ஆனால் கூட சில தவறுகள் நேர்ந்து விடுகிறது. அது கலைஞர்களின் குறை அல்ல. கால அவகாசம் இல்லாததால்தான் அப்படி நேர்கிறது. சரியான இசையை கொடுக்க முடியாதபோது அது மனவருத்தத்தை தருகிறது. அதனால் தான் நான் வெளிநாடுகளில் இசைக் கச்சேரிகளை ஏற்றுக்கொள்வதில்லை, தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.

இளையராஜாவுக்கும் இசைக்கும் உண்டான இணைபிரியா பந்தத்தை உணர்ந்த ரசிகர்கள் உறைந்து விட்டனர்.

'நிலா அது வானத்து மேலே' ஆக மாறிய தாலாட்டு

அக்னி நட்சத்திரத்தில் இடம்பெற்ற நின்னுக்கோரி வர்ணம் என்ற பாடலை சித்ரா பாடி முடித்த போது கட்டுக்கடங்காத கரகோஷம். அப்போது கையில் இருந்த 'நோட்ஸ்' எடுத்துக் காட்டிய ராஜா, இது 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி எழுதப்பட்ட நோட்ஸ். அதைத்தான் அப்படியே இசைக் குழுவினருக்கும் கொடுத்தேன். இதோ உங்களுக்கும் காண்பிக்கிறேன் என்றார். அதைப் பார்த்து அரங்கமே ஆர்ப்பரித்தது.

நாயகன் படத்தில் 'நிலா அது வானத்து மேலே' பாடலை பாடும் முன்பாக அது உருவான கதையை விவரித்தார். முன்னதாக, தாய் இறந்த பிறகு பிள்ளைகளுக்கு ஆறுதலாக தாலாட்டு பாடலாகத்தான் அதை அமைத்திருந்தாராம். பாடலைக் கேட்ட மணிரத்னம், இதை கொஞ்சம் வேகமாக மாற்றி, படகு மேல் போகும் போது துள்ளலான பாடலாக மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார். ராஜாவும் தாலாட்டை அப்படியே மாற்றி நிலா அது வானத்து மேலேவாக மாற்றி விட்டார். முதலில் தாலாட்டு பாடலை பாடி, எப்படி மாற்றினார் என்பதையும் பாடிக் காட்டும் போது கைத்தட்டல்களில் அரங்கம் அதிர்ந்தது.

அமெரிக்க பாப் பாடல்

திடிரென்று ஒரு அமெரிக்க ஆங்கிலப் பாடலை மேடையில் ஒலிக்கச் செய்தார். என்னவென்று எல்லோரும் யோசித்த வேளையில் தன்னுடைய இசையை எப்படி இங்கே காப்பி அடித்துள்ளார்கள் என்று கேட்டுவிட்டு, ராகவேந்திரா பட பாடலை பாடினார். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றி அப்படியே அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டிருந்த்து அந்த பாடல். இதுக்கெல்லாம் ராயல்டி கேட்டு இளையராஜா. கேஸ் போட மாட்டார் என்ற தைரியம் அமெரிக்கா வரைக்கும் போய்விட்டது போலிருக்கு.

ஒரு சமயத்தில் ரசிகர்கள் கூச்சல் செய்து ஆர்ப்பாட்டம் செய்த போது, தாய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது போல், உங்களுக்காக கலைஞர்களுடன் மூன்று மாதம் ஒத்திகை பார்த்து வந்து இசையை ஊட்டுகிறேன். அமைதியாக இருந்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியை காண கனெக்டிகட், நியூஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, மேரிலாண்ட், வர்ஜீனியா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமல்லாமல் டெக்சாஸ் போன்ற தொலைதூரத்து மா நிலங்களிலிருந்தும் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்தை விட்டு, பல்லாயிரம் பேர் மொத்தமாக வெளியேறிய போது, நள்ளிரவிலும் ட்ராபிக் ஜாம் ஆனது.

- நியூஜெர்ஸியிலிருந்து சிட்னி ஸ்ரீராம் மற்றும் உதயன்

 

மார்ச் 1... ஒரே நாளில் ஒன்பது படங்கள்!

9 Releases On March 1

ஒரு நாளுமில்லாத திருநாளாய் வரும் மார்ச் மாதம் முதல் தேதியன்று மட்டுமே 9 படங்கள் வெளியாகப் போகின்றன.

இந்த பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட 25 படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தன. ஆனால் விஸ்வரூபம் படத்துக்கு அதிகபட்சமாக 500 அரங்குகள் கொடுத்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது.

இதன் விளைவு பெரும்பாலான படங்களை தள்ளி வைத்துவிட்டனர். அந்தப் படங்கள் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன.

வரும் மார்ச் 1-ம் தேதி மட்டும், கருணாஸ் நடித்த சந்தமாமா, புதுமுகங்கள் நடித்த வெள்ளச்சி, கண்பேசும் வார்த்தைகள், கரும்புலி, நினைவோடு கலந்துவிடு, நேசம் நெசப்படுதே, ஆண்டவ பெருமாள், நான்காம் பிறை 3 டி, சுண்டாட்டம், ரொம்ப நாளாக பராக் பராக் என்று சொல்லிக் கொண்டிருக்கும் லொள்ளு தாதா போன்ற படங்கள் திரையைத் தொடுகின்றன.

இந்தப் படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் லிஸ்ட் கூட வெளியாகியுள்ளது.

இந்த ஒன்பது படங்களும் ஒரே நாளில் வெளியானால், அதிகப் படங்கள் வெளியான சாதாரண வெள்ளிக்கிழமை இந்த வாரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூர்யாவின் தேதிக்காக மோதும் கவுதம் மேனன் - லிங்குசாமி!

Goutham Menon Lingusamy Compete Get Suryas Date

சிங்கம் 2 முடிந்த பிறகு சூர்யாவின் தேதி யாருக்கு..? இந்த கேள்வியோடு சூர்யாவைத் துரத்த ஆரம்பித்துள்ளனர் இயக்குநர்கள் கவுதம் மேனனும் லிங்குசாமியும்.

மாற்றானுக்குப் பிறகு சூர்யா நடித்துவரும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கும் இந்தப் படம் முடிவடையும் தறுவாயில் உள்ளது.

அடுத்து இரு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதில் ஒரு படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். படத்துக்கு தலைப்பு துப்பறியும் ஆனந்தன்.

இன்னொருவர் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தாவை ஒப்புந்தம் செய்துவிட்டு ஸ்க்ரிப்டோடு காத்திருக்கிறார் லிங்குசாமி.

இருவருமே சூர்யா ரெடி என்றதும் ஷூட்டிங் செல்லக் காத்திருக்கிறார்கள். எனவே யாருக்கு முதலிடம் தருவது என்பதில் சூர்யாவுக்கே பெரும் குழப்பமாக உள்ளதாம்.

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, இரண்டு படங்களுக்கும் சமமாக தேதிகள் ஒதுக்கி ஒரே நேரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா.

இரண்டு கதைகளுமே நிச்சய வெற்றி என்ற நம்பிக்கை சூர்யாவுக்கு இருப்பதால், மாற்றானில் விட்டதை அடுத்தடுத்து ஹாட்ரிக் அடித்து சரிகட்டிவிடலாம் என்கிறாராம் தெம்போடு!

 

பரதேசி வரும் தேதி மார்ச் 15... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bala S Paradesi From March 15   

பாலா படங்களில் பெஸ்ட் இதுதான் என பலரும் பாராட்டி வரும் பரதேசி படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தேதிகளை யூகமாகக் கூறி வந்த பாலாவும் அவரது குழுவினரும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பரதேசி படத்தை முதலில் பிவிபி நிறுவனம் தயாரித்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் பாலாவே, பி ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தயாரிக்கிறார்.

ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் ரெட் டீ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 1930களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்னம், அனுராக் காஷ்யப் போன்றவர்கள் படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில், படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குநர் பாலா.

இதனால் பட வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார். இப்போது வரும் மார்ச் 15-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் பாலா.

படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.

 

திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம்

சென்னை: திரைப்பட இயக்குநர் யார் கண்ணனுக்கு தமிழ் கலைக் காவலர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி கண்ணதாசன் நகரில் எண்ணம் அறக்கட்டளையும், எழுத்தேணி அறக்கட்டளையும் தமிழ் எழுச்சிப் பேரவையுடன் இணைந்து முப்பெரும் விழா நடத்தின.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநரும், பாடல் ஆசிரியரும், நடிகருமான யார் கண்ணன் அவர்களுக்கு தமிழ் கலைக் காவலர் என்ற பட்டமும், தமிழகத் துறைமுகங்கள் பற்றியும் தமிழரின் கடலியல் பற்றியும் ஆய்வு நடத்தி வரும் ஒரிசா பாலசுப்பிரமணியன், தமிழக வரலாற்றுச் செய்திகளை தம் நாட்காட்டியில் வெளியிட்டுள்ள பூர்விகா நிறுவனத்தின் வடிவமைப்பாளர் துரை குமார், தமிழக நாட்டு மாடுகளைப் பாதுகாத்து வரும் கோவை வட வள்ளி சண்முகம், தமிழக நெல்விதைகளைப் பாதுகாத்து வரும் திருத்துறைப்பூண்டி செயராமன் ஆகியோர் தமிழ் மரபுக் காவலர் பட்டமும் நினைவுப் பரிசும் வழங்கிப் பாராட்டப் பெற்றனர்.

கவிஞர் பன்னீர் செல்வன், கவிஞர் மறத்தமிழ்வேந்தன், திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் செல்லன், கல்லூரி கல்வித்துறைத் துணை இயக்குநர் அ.மதிவாணன், முனைவர் இறையரசன் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

 

மனோ மகனை நடுக்கடலில் பயமுறுத்திய எம்எஸ் பாஸ்கர்!

Ms Bhaskar S Fun At Mid Sea

நீண்ட இடைவெளிக்கு பிறகு பழ. கருப்பையா ஒரு படம் தயாரிக்கிறார். படத்துக்குப் பெயர் 'நாடி துடிக்குதடி'. இந்த படத்தை செல்வா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படபிப்டிப்பு பிஜி தீவுக்களில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், "பிஜி தீவிலிருந்து வனலேவு தீவுக்கு எட்டு மணி நேரம் போட்ல போகணும். அப்படி போய்விட்டு திரும்பும் போது நாங்க சென்ற போட்டு பயங்கரமா ஆடியது.

நான் வெளியே வந்து பார்த்தேன். அலைகள் பயங்கரமா வந்து போட்டுல மோதியது. போட்டு கவுந்திடுரா மாதிரி ஆடுது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாடகர் மனோவின் மகன் ஜாகீர், ‘என்ன மாமா கடல் இப்படி கொடூரமா கொந்தளிக்குது. இப்போ என்ன பண்றது' என்று என்னிடம் கேட்டார்.

'இறை நம்பிக்கை இருந்தால் பிரே பண்ணு. மேக்சிமம் இப்படியே போச்சுன்னா ஆளுக்கு ஒரு லைப் ஜாக்கெட் தருவாங்க. அதை வாங்கிட்டு இந்த பசிபிக் கடலில் குதிக்க வேண்டியதுதான். என்ன எந்த பக்கம் கரை இருக்குன்னே தெரியாது. மெதந்துகிட்டே போக வேண்டியதுதான். அப்படியே மெதக்காலமுன்னாலும், கடல் கொந்தளிப்பு ஒரு புறம், குளிர் இன்னொரு புறம் கடுமையா இருக்கு''. என்று நான் சொல்லி முடிப்பதற்குள், சரசரன்னு ஒரு பெரிய மீன் அருகே வந்து வாலாட்டிச் சென்றது.

இதை பார்த்ததும் ஜாகீர் இன்னும் மிரண்டு போனார். அவரை பார்த்து, "என்ன இவுங்க மாதிரி ஆளுங்கல்லாம் வருவாங்க. அதையெல்லாம் ஏதிர்த்து நாம போகணும்,'' என்றேன்.

அவர் அவ்வளவுதான். அரண்டு ஆடி போய்விட்டார். பிறகு போட் ஒட்டியவரிடம் கடல் கொந்தளிப்பை பற்றி கேட்டோம். "உங்களுக்கு இது புதுசு. எங்களுக்கு இது பழகிவிட்டது என்றார். அப்பப்போ இந்த மாதிரி சீற்றம் இருக்கும். அதை பற்றி காவலை படமுடியுமா. சில சமயம் படகு கவிழ்ந்து பயணிகள் இறந்த அனுபவமும் உண்டு,'' என்று கூலாக சொன்னார்.

அப்போது ஒரு பெரிய ராட்சச அலை வந்து மடார் என்று போட்டை தாக்க, அது அப்படியும் இப்படியும் தள்ளாடியாது. நாங்கள் கரைசேரும் வரையில் உயிரை பிடித்துக்கொண்டுதான் வந்து சேர்ந்தோம்," என்றார்.

நாடி துடிக்குதடி படத்தின் கதை பிஜி தீவில் நடப்பதுபோல படமாக்கி வருகிறார் இயக்குனர் செல்வா. விடுமுறைக்காக பிஜி தீவு செல்லும் இளைஞன் அங்கு வசிக்கும் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை.

நாடி துடிக்குதடி, ரணம், சரவண பொய்கை, சொல்லித்தர நானிருக்கேன், சுட்டகதை, ரகளபுரம், சந்தாமாமா, இருவர் உள்ளம், காதல் பிரதேசம், நகராஜசோழன், தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம், தமிழ், மலையாளம் இரு மொழிகளில் உருவாகும் ஒரு படம் என கைவசம் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

 

ரஜினி படம்... ஒப்புக் கொண்ட ஈராஸ்... மறுக்கும் கேவி ஆனந்த்!

Eros Produce Rajinikanth S Next Movie

சென்னை: கேவி ஆனந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்நடிக்கும் புதிய படத்தை தாங்கள்தான் தயாரிக்கவிருப்பதாக ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது வதந்தி என கேவி ஆனந்த் மறுத்துள்ளார்.

ஈராஸ் இன்டர்நேஷனலுக்காக ஏற்கெனவே கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படம் தொடங்கப்பட்டது. ரஜினியின் உடல்நிலை காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது.

ரஜினி உடல்நிலை குணமடைந்து வந்த பிறகு கோச்சடையான் தொடங்கப்பட்டது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் கோடை ஸ்பெஷலாக வரவிருக்கிறது.

இந்த நிலையில், கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் குறித்து ஏராளமான செய்திகள் வந்தன. இந்தப் படத்தை கே வி ஆனந்த் இயக்குகிறார், ஏஜிஎஸ் தயாரிக்கிறது.. அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்தன.

ஆனால் இப்போது அந்தப் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது என்ற தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்தை வைத்து மூன்று படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளோம். அதில் ராணாவும் கோச்சடையானும் தயாரிப்பில் உள்ளன. அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். பெயர், நடிகர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது ரஜினியின் படம். எனவே ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட் இருக்கும்," என்று கூறியுள்ளார்.

கேவி ஆனந்த் ரஜினியுடன் சிவாஜியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 'மாற்றானுக்குப் பிறகு ரஜினிக்காக கதை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் கேவி ஆனந்த். கோச்சடையான் வெளியாகும் முன்பே இந்த புதிய பட அறிவிப்பு வரக்கூடும்,' என்கிறார்கள்.

மறுக்கும் கேவி ஆனந்த்

ஆனால் இந்த செய்தி குறித்து ட்விட்டரில், மறுப்பு தெரிவித்துள்ளார் கேவி ஆனந்த். "என்னுடைய ‘மாற்றான்' போய் கையெழுத்திட்டிருந்தால்தான் இது சாத்தியம். இப்போது கதையை உருவாக்குவதில்தான் தீவிரமாக உள்ளேன். மற்றபடி இப்போதைக்கு எல்லாமே வதந்திதான்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

இளையராஜா பேச்சு குழந்தைத்தனமானது - பாரதிராஜா

Bharathiraja Now Comments On Ilayaraaja

இளையராஜா - பாரதிராஜா மோதலை அவர்களே மறந்தாலும், மீடியா விடாது போலிருக்கிறது.

கடந்த வாரம் பாரதிராஜா பேச்சு குறித்து கோபத்துடன் எழுதியிருந்தார் இளையராஜா. அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு முதலில் கருத்து கூற மறுத்த பாரதிராஜா, இப்போது ரொம்ப குத்தலாக பதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல.

ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, ரஜினிக்கும் கமலுக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட். நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான்.

இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.

நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் தயங்கல.

நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒளிவு மறைவும் கிடையாது. நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டிருப்பான்," என்று கூறியுள்ளார்.

 

ஐட்டம் டான்சராகிவிட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்

Power Star Srinivasan Turns As Item Dancer

தமிழ்சினிமாவில் இன்றைக்கு ஏதாவது ஒரு படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடணுமா... வாங்க சீனிவாசனை வைத்து ஒரு காமெடி பண்ணலாம் என கிளம்பிவிடுகிறார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.

கவர்ச்சியான நான்கு நடிகைகளை ஆட விட்டு, அவர்களுடன் டான்சே தெரியாத சீனிவாசன் கையைக் காலை ஆட்டுவதை வைத்து கவர்ச்சி ப்ளஸ் காமெடி ஐட்டம் பாட்டு எடுப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

கிட்டத்தட்ட பத்துப் படங்களில் இப்படிப்பட்ட பாடல் மற்றும் நடனம் ஆட ஒப்புக் கொண்டுள்ளார் பவர் ஸ்டார்.

ஒன்பதுல குரு, சும்மா நச்சுனு இருக்கு, அழகன் அழகி, சேட்டை, ஐ.. இப்படி நீள்கிறது பட்டியல். ஷங்கரின் ஐ படத்தில் கூட பவர் ஸ்டாருக்கு ஒரு பாடல் இருக்கிறதாம்.

அழகன் அழகி ஷூட்டிங்கிலிருந்த அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "எனக்கு இந்த வேடம் அந்த வேடம் என்ற பாகுபாடில்லை. என்னிடம் என்ன வேண்டுமோ அதை இயக்குநர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ரொம்ப சந்தோசமா இருக்கு," என்றார்.

 

‘லைப் ஆப் பை’ படத்திற்கு ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் செய்த நிறுவனம் திவால்… ஆஸ்கர் விழாவில் ஆர்ப்பாட்டம்

Special Effects Artists Picket Oscars

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘லைப் ஆப் பை' படத்திற்கு விருது அறிவிக்கப்படும் நேரத்தில் அந்த படத்திற்கு ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் செய்த ஊழியர்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

85 வது ஆஸ்கர் விருதுகள் லாஸ் ஏஞ்சலெஸில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விருது வழங்கப்படும் விழாவுக்கு கலைஞர்கள் வந்துசேரும் ரெட்-கார்ப்பெட் நிகழ்வின்போது, யாரும் எதிர்பாராத ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் லைப் ஆப் பை படத்தின் ஸ்பெஷன் எஃபக்ட்ஸ் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களே. காரணம், இந்தப் படத்துக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்து கொடுத்த நிறுவனம் சமீபத்தில் திவாலாகி விட்டதாக அறிவித்ததில், அதன் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்தனர்.

இதனையடுத்து ஆஸ்கார் விருது வழங்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் தியேட்டருக்கு முன்னால் கூடிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விருது பெறப்போகும் நட்சத்திரங்கள் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வருகையில், ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

லைப் ஆப் பை படத்தின் ஸ்பெஷன் எஃபக்ட்ஸ் பணியை செய்து கொடுத்த தனியார் நிறுவனம் ரிதம் அன் ஹியூஸ் ஸ்டுடியோ. (Rhythm and Hues Studios) கலிபோர்னியா, எல்-செகுண்டோவை தலைமையகமாக கொண்டது. இதன் கிளை நிறுவனம் ஒன்று மும்பை, மலாட் ஹைடெக் சிட்டியில் உள்ளது. கடந்த 11-ம் தேதி, இந்த நிறுவனம் சாப்டர்-11 சட்டப்படி திவால் நிலையை அறிவித்தது. சுமார் 200 ஊழியர்களுக்கு வேலை போனது. இதனையடுத்து இந்த தொழிலாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஊழியர்களை கைவிட கூடாது" என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.

திவாலான நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த இரு படங்கள் பாபே(Babe) (1995) தி கோல்டன் கேம்பஸ் (The Golden Compass (2008) ) ஏற்கனவே ஆஸ்கார் விருதுகளை வென்ற நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட விருதுகளிலும், இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த லைப் ஆப் கை, ஆஸ்காரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநராகிறார் ஏ ஆர் ரஹ்மான்!

A R Rahman Direct Movie Soon

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளர் - தமிழர் என்ற பெருமைக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

நீண்ட நாட்களாக ஒரு கதையை எழுதி வருவதாகவும், விரைவில் அதை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. படத்தை இயக்குவது குறித்து தனது நண்பரான ரசூல் பூக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, "ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போதே ஒரு படத்திற்காக கதையை எழுதி முடித்துள்ளார். இந்த கதையை நானும் ஏ.ஆர்.ரகுமானும் பலமுறை கலந்து பேசியுள்ளோம். விரைவில் படத்தை துவங்கவும் உள்ளோம். இப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு நடிகர், நடிகையர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது," என்றார்.

உலக சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ரஹ்மான். தான் இசையமைக்கும் படத்தின் கதையில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துவது வழக்கம். தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் அவர்களின் கதைகளில் தேவையான மாறுதல்களையும் அவர் சொல்வதுண்டு.

 

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ் மீட்டுக்கு ஆட்டோவில் வந்த பவர்ஸ்டார்

Summa Nachunu Irukku Press Meet Power Star

சென்னை: சும்மா நச்சுன்னு இருக்கு பட பிரஸ் மீட்டுக்கு பவர்ஸ்டார் சீனிவாசன் ஆட்டோவில் வந்திறங்கினார்.

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ் மீட் சென்னையில் உள்ள ஜிஆர்டி கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஷ், ஹீரோ தமன் குமார், ஹீரோயின் விபா, கேமராமேன் சிஜே ராஜ்குமார், தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோர் வந்துவிட்டனர். ஆனால் முக்கியமான ஒரு ஆளைக் காணவில்லை.

இதையடுத்து படக்குழுவினர் அவருக்காக காத்திருந்தனர். அந்த முக்கிய நபர் வேறு யாருமில்லை பவர்ஸ்டார் தான். நிகழ்ச்சிக்கு வரும் வழியில் கார் பன்ச்சரானதால் ஒரு ஆட்டோவை பிடித்து வந்து சேர்ந்தார். பவர் ஆட்டோவில் வந்து இறங்கியது அங்குள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த படத்தில் பவர் ரஷ்ய நாட்டு டான்ஸர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுகிறாராம். தனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு பவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். புத்தாண்டு அன்று சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில் நடிக்க செக் கொடுத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

 

ரீமா சென்னுக்கு ஆண்குழந்தை!

Reema Sen Delivers Male Baby

நடிகை ரீமா சென்னுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மின்னலே படத்தில் அறிமுகமானவர் ரீமா சென். தமிழ், தெலுங்கு, இந்தியில் நிறைய படங்களில் நடித்த அவர், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஷிவ்கரன்சிங்கை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார்.

ரீமாசென் கர்ப்பமான பிறகும் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிப்புக்கு தற்காலிகமாக குட்பை சொன்னார்.

டெல்லியில் கணவருருடன் இருந்த அவருக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரீமாசென்னுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் கணவர் ஷிவ்கரன்சிங் நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

 

அஜீத் எனக்கு எப்போ போன் செய்தார்? கேள்வி கேட்கும் குஷ்பு

Ajith Didnt Call Me Says Kushboo

அரசியல் விவகாரங்களில் சிக்கி மீடியாவில் அடிபட்டுக்கொண்டிருக்கும் குஷ்புவிற்கு அஜீத் ஆறுதல் சொன்னதாக ஊடகங்களில் செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தன. இந்த நிலையில் தனக்கு அஜீத் போன் செய்யவில்லை. இது தவறான செய்தி என்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதுபோன்று தேவையற்ற செய்திகளை வெளியிட்டு ஓவர் டைம் செய்வதை நிருபர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் குஷ்பு கண்டிப்பு காட்டியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பது பற்றி ஆனந்த விகடனில் குஷ்பு கருத்து கூறியதுதான் பிரச்சினையின் ஆரம்பம். இதற்கு ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆக்சன், திமுக தலைவர் கருணாநிதியின் ரியாக்சன் என கடந்த இருவாரங்களாக ஊடகங்களின் செய்திகளில் அனல்தான். இதனிடையே இன்னொரு மணியம்மை என்று ரிப்போர்ட்டர் செய்தி போடவே மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதனைக் கண்டித்து திமுக வினர் குமுதம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குஷ்புவும் டுவிட்டரில் காட்டமாக செய்தியை பகிர்ந்து கொண்டார். நக்கீரன் இதழுக்கு பேட்டியும் அளித்தார்.

இந்த நிலையில், குஷ்புவுக்கு அஜீத் போன் செய்து ஆறுதல் கூறியதாக நேற்று முழுவதும் செய்திகள் பரபரத்தன. அஜீத் பேசிய செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து, வெவ்வேறு வடிவங்களில் செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. இந்த தகவலை இன்று மறுத்திருக்கிறார் குஷ்பு.

இன்று அவர் ட்விட் பண்ணியுள்ள தகவலில், அஜீத் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர் எனக்கு போன் பண்ணவில்லை. நான் இருக்க வேண்டிய இடத்தில் நலமே இருக்கிறேன். அவரும் அப்படித்தான். அவர் எதற்காக எனக்கு போன் செய்ய வேண்டும்? இது தவறான செய்தி என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, "சில செய்தியாளர்கள் ‘கற்பனை கோட்டை' தாண்டுவதை எப்போது நிறுத்தப் போகிறார்கள்? எப்போது எனக்கு அஜீத் போன் செய்தார்? இந்த நான்சென்ஸ் செய்தி ஏன் சுற்றி வருகிறது?

மேலும் சில செய்தியாளர்கள் பணியில், ‘ஓவர்டைம்' செய்வதற்காக இப்படியான கதைகளை உருவாக்குகிறார்களோ" என்றும் கேட்டிருக்கிறார்.

 

'சும்மா'வுக்காக பரிநிதி சோப்ராவைப் பிடித்த ராஜசேகர் தங்கை மகன்!

Bollywood Diva Pariniti Chopra Make Debut   

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் இயக்குநர் கம் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்துக்குப் பெயர் சும்மா!

இந்தப் படத்துக்கு முன்பே பார்வதிபுரம் என்ற தமிழ்ப் படத்திலும், கமணம் என்ற தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் மதன். ஆனால் அதற்கு முன்பே இந்த சும்மா வந்துவிடும் போலிருக்கிறது.

சும்மா படத்தில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை பரிநிதி சோப்ராவை ஒப்பந்தம் செய்துள்ளார் மதன்.

கோலிவுட்டைப் பொறுத்தவரை இது கொஞ்சம் ஆச்சர்யமான செய்தி. காரணம் ஏற்கெனவே சில பிரபல இயக்குநர்கள் அணுகியும் கூட சம்மதிக்காத பரிநிதி, இப்போது அறிமுக இயக்குநருக்கு ஓகே சொல்லியிருப்பதுதான்.

அப்படி ஒன்றும் சாதாரணமாக ஓகே சொல்லிவிடவில்லையாம் பரிநிதி. மும்பை மீடியேட்டர் மூலம் தன்னைத் தொடர்பு கொண்ட மதனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்ட பரிநிதி, பெரிய தொகையாகக் கேட்டிருக்கிறார். எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டுதான் சம்மதம் பெற்றாராம். ஆனால் கேட்ட தேதிகளை முழுமையாகக் கொடுத்திருக்கிறாராம் பரிநிதி.

காடுகளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் ஒரு கதை இது என்கிறார் மதன். தமிழகம், ஆந்திரா, கேரளா என மூன்று மாநிலங்களிலும் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

இளையதம்பி விவகாரம்: பவர்ஸ்டார், விஜய் ரசிகர்கள் மோதல்

Clash Between Power Star Vijay Fans

சென்னை: தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பவர்ஸ்டார் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவர் மோதிக் கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைய தளபதி விஜய் என் இளைய தம்பி என்று பவர்ஸ்டார் அண்மையில் தெரிவித்திருந்தார். போயும் போயும் பவர்ஸ்டார் எப்படி இளைய தளபதியை இளைய தம்பி என்று அழைக்கலாம் என்று அந்த முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் ரசிகர் ஒருவர் ஆவேசப்பட்டுள்ளார்.

இதைக் கேட்டு அங்கிருந்த பவர்ஸ்டார் ரசிகர் ஒருவர் கொதித்துவிட்டார். ஏன் எங்க பவர்ஸ்டாருக்கு என்ன, அவருக்கு அப்படி சொல்ல தகுதி உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர் மற்றும் பவர் ஸ்டார் ரசிகருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றி அலுவலகம் என்று கூட பார்க்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு சக ஊழியர்கள் வந்து விலக்கிவிட வேண்டியதாகிவிட்டது.

இந்த சம்பவத்தால் அந்த அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

அஜீத் படத்துக்கு தலைப்பு வலை... ரிலீஸ் ஜூலையில்!!

Ajith S Valai Scheduled July

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புது படத்துக்கு வலை என்ற தலைப்பே இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தொடங்கிவிட்டார்கள்.

படத்தை மே 1-ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் வெளியிடப் போவதாக ஒரு செய்தி பரவியது.

ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்திடம் கேட்டபோது, "படத்துக்கு இப்போது வலை என்பதுதான் தலைப்பு. ஆனால் மாறினாலும் மாறக்கூடும். அஜீத் பிறந்த நாள் அன்று படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை. எப்படிப் பார்த்தாலும் ஜூன் இறுதி வரை பணிகள் நடக்கும். ஜூலையில் படத்தை வெளியிடும் திட்டமுள்ளது," என்றார்.

இப்போது துபாயில் உள்ள வலை படக்குழு, மார்ச் முதல் வாரம் சென்னை திரும்புகிறது. இங்கும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

 

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க… நீயா நானாவில் நிபுணர்களின் அறிவுரை

Neeya Naana Late Marriage Vs Early Marriage

படிப்பு, வேலை, குடும்ப சுமைகள் என பெரும்பாலான இளைஞர்கள் இன்றைக்கு 30 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்து கொள்கினற்னர் அதே சமயம் படித்த உடன் வேலை, கை நிறைய சம்பளம் என ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் 23 வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதில் எந்த வயது திருமணத்திற்கு ஏற்ற வயது என்பது பற்றி ஞாயிறு இரவு நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது. இளம் வயது திருமணமே சரியானது என்றும், குடும்ப சுமைகளை நீக்கிய பின்னர் 28 வயதுக்கு மேல் திருமணம் செய்வதுதான் நல்லது என்றும் இரு தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இடையே சண்டையே ஏற்படாது என்றும் அவ்வாறு சண்டை வந்தாலும் எளிதில் சமாதானமாகிவிடுவார்கள் என்றும் இளவயது திருமணத்தை ஆதரிப்பவர்கள் தெரிவித்தனர்.

அதே சமயம் 28 வயதிற்கு மேல் திருமணம் செய்பவர்களுக்குத்தான் ஒரு முதிர்ச்சி இருக்கும் என்றும் அவர்கள்தான் குடும்பத்தை திறமையாக நடத்துவார்கள் என்றும் இள வயது திருமணத்தை எதிர்ப்பவர்கள் பேசினார்கள்.

திருமணம் செய்து கொள்வதற்கு எந்த வயது ஏற்றது என்பது பற்றி விளக்கம் அளிக்க இந்த நிகழ்ச்சியில் பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் நாகராஜன், பிரபல வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் நாகராஜன், சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு ஏற்றது என்றார்.

பெண்ணோ, ஆணோ வயதான பின்னர் திருமணம் செய்து கொள்வதன் மூலம் உடல்ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். தவிர பெண்களுக்கு குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படும் என்றார்.

தவிர எந்த வயதில் முதிர்ச்சி வரும் என்று சொல்ல முடியாது. 21 வயதில் முதிர்ச்சியடைந்த நபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதேபோல் 40 வயதைக் கடந்தும் முதிர்ச்சிடையாதவர்கள் இருக்கின்றனர் என்றார் மருத்துவர்.

இன்றைக்கு இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றனர். அது அவசியமில்லை, குழந்தைகளை பெற்றுக்கொண்டு அதன்பின்னர் வாழ்க்கையை அனுபவியுங்கள் என்று அறிவுறுத்தினார்.

இன்றைய சூழலில் குழந்தை பிறப்பு என்பது வரம்போலதான் கிடைக்கிறது. ஏனெனில் உணவும், மாசடைந்த சூழலும் கூட குழந்தை பிறப்பை தடுக்கும் காரணிகளாக இருக்கின்றன. எனவே ஆணாக இருந்தால் 24 வயதில் இருந்து 28 வயதிற்குள்ளும், பெண்ணாக இருந்தால் 22 முதல் 24 வயதிற்குள்ளும் திருமணம் செய்து கொள்வது ஏற்ற பருவம் என்றார்.

காலம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்கள்தான் அதிகம் சண்டை போட்டு விவாகரத்து செய்து கொள்வதாகவும் கூறினார் நிபுணர். இதேபோன்று இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்தான் அதிகம் இணக்கமாக இருப்பதாக கூறினார் வழக்கறிஞர் கனிமொழி மதி. இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு விவாகாரத்து என்று வரும் போது அவர்களை எளிதாக கவுன்சிலிங் செய்துவிடலாம் என்றும் கூறினார் அவர்.

குடும்ப சூழ்நிலை, பொறுப்பு என்று திருமணத்தை ஒத்திப்போடாமல் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது நல்லது என்றும் கூறினார் கனிமொழி மதி. மனித வாழ்க்கையில் திருமணமும், குழந்தை பிறப்பும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்று. எது சரியான பருவம் என்பதே கூட சில குழப்பம் உள்ளது. நீயா நானாவில் பேசப்பட்ட கருத்துக்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு தெளிவு படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

நிபுணர்களின் கருத்து சரிதான் அதேசமயம் வரதட்சணை பிரச்சினையால் முதிர்கன்னிகள் ஆகி திருமணம் செய்து கொள்ளும் பெண்களும், அக்கா, தங்கைகள், குடும்ப சூழ்நிலையால் 30 வயதுவரை குடும்பத்திற்கு உழைக்கும் ஆண்களும் இருக்கத்தானே செய்கின்றனர். அவர்கள் லேட்டாகத்தானே திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது மிஸ்டர் கோபிநாத்.

 

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது இல்லை… ஸ்கைபால் பாடகி தட்டிச்சென்றார்

Adele S Skyfall Wins Best Song Oscar

பாம்பே ஜெயஸ்ரீ எழுதி பாடிய பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. சிறந்த பாடலுக்கான விருதை ஸ்கை பால் படத்தில் பாடல் பாடியுள்ள அடெல் தட்டிச்சென்றார்.

85 வது ஆஸ்கார் விருதுக்கு, சிறந்த பாடலுக்கான விருது பெறுவோரின் பட்டியலில், லைப் ஆப் பை படத்தில் பாடல் பாடியுள்ள இந்திய பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

முதன் முறையாக இந்திய பாடகி ஒருவரின் பாடல் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பாம்பே ஜெயஸ்ரீக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாடலுக்கான விருது அவருக்கு கிடைக்கவில்லை.

இன்று அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 85வது ஆஸ்கர் விருது அளிப்பு விழா நடைபெற்றது. அதில் ஸ்கை பால் படத்தில் பாடல் பாடியுள்ள அடெல் சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச்சென்றார்.

 

தனுஷ் கேட்டா நான் மாட்டேன்னா சொல்வேன்? - ஹன்ஸிகா

Hansika S Explanation On Dhanush Movie

தனுஷ் படத்தில் நான் நடிக்க மறுத்துவிட்டதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அவர் எப்போதும் என் நெருக்கமான நண்பர், என்று நடிகை ஹன்ஸிகா கூறியுள்ளார்.

தனுஷ் இப்போது மரியான் என்ற தமிழ்ப் படத்தையும், ராஞ்ஜனா என்ற இந்திப் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

அடுத்து சற்குணம் இயக்கத்தில் நய்யாண்டி படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் என்ற மலையாள நாயகி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஹன்ஸிகா மற்றும் அமலா பாலிடம் கேட்டதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்து ஹன்ஸிகா வெளியிட்டுள்ள விளக்கத்தில், "தனுஷ் எனக்கு மிகச் சிறந்த நண்பர். அவருடன் நான் மாப்பிள்ளை படத்தில் நடித்திருக்கிறேன். நய்யாண்டி படத்தில் நடிக்க என்னைக் கேட்டது உண்மைதான். நானும் நடிக்க சம்மதித்தேன். ஆனால் தேதிகள் ஒத்துவரவில்லை. எனவே அவர்கள் வேறு நடிகையை தேடிக் கொண்டனர். மற்றபடி, தனுஷ் கேட்டு நான் மறுப்பேனா...," என்று கூறியுள்ளார்.

 

குத்தாட்டம் போட ஆசையா இருக்கு: அதித்தி ராவ் ஹைதரி

I Want Do An Item Number Next Adit

டெல்லி: குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட ஆசையாக உள்ளது என்று சிருங்காரம் நாயகி அதித்தி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு வெளியான சிருங்காரம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் அதித்தி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகர் ஆமீர் கான் மனைவி கிரண் ராவின் உறவினர். அவர் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் அவர் நடித்த மர்டர் 3 படம் ரிலீஸானது. பரதநாட்டிய கலைஞரான அவர் லண்டன் பாரிஸ் நியூயார்க் என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக நடித்ததோடு பாடியும் உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.

பாலிவுட் நடிகைகள் பலரும் குத்துப்பாட்டுக்கு படுகவர்ச்சியாக ஆட்டம் போட போட்டா போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அதித்திக்கும் அந்த ஆசை வந்துள்ளது. அதித்தி அக்ஷய் குமாருடன் நாம் நஹி பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இது சூப்பர் ஹிட் மலையாள படமான போக்கிரி ராஜாவின் ரீமேக் ஆகும்.

 

கண்ணா லட்டு தின்ன ஆசையாவை பார்த்து வரனே வந்தது: விசாகா

Power Star S Wife Is My Friend Vishaka

சென்னை: பவர் ஸ்டாரை விட அவரது மனைவி தனக்கு நல்ல பிரண்ட் என்று கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நாயகி விசாகா தெரிவித்துள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பின்போது பவர் ஸ்டாரை விட அவரது மனைவி தனக்கு நல்ல பிரண்டாகிவிட்டதாக விசாகா தெரிவித்துள்ளார். பவர் ஸ்டாரின் மனைவிக்கு இந்தி தெரியும் என்பதால் விசாகாவிடம் சகஜமாகப் பேசியுள்ளார். ஆனால் பவருக்கு இந்தி கொஞ்சம் கொஞ்சம் தான் வரும் என்பதால் விசாகாவிடம் பேசுவதில் சிக்கலாகிவிட்டது.

இது குறித்து விசாகா கூறுகையில்,

பவர் ஸ்டார் தான் நடித்த லத்திகா படம் 300 நாட்கள் ஓடியதாகவும். அதை பார்க்குமாறும் என்னிடம் கூறினார். ஆனால் நேரம் கிடைக்காததால் இன்னும் படத்தை பார்க்கவில்லை. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைப் பார்த்து எனக்கு வரன் வந்தது என்றார்.

 

'என்னது விஷாலுக்கு சம்பள பாக்கியா... அந்தப் படத்தாலே நான் போண்டிங்க!' - சமர் தயாரிப்பாளர்

Samar Producer Denies Vishal S Comp

சென்னை: சமர் படத்தில் விஷாலுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளம் தரப்பட்டுவிட்டது. ஆனால் அந்தப் படத்தால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டமாகிவிட்டது என்று புலம்பியுள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

விஷால் திரிஷா ஜோடி யாக நடித்த ‘சமர்' படம் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படத்தை டி.ரமேஷ் தயாரித்து இருந்தார். திரு இயக்கினார். படம் வசூலில் சுமார் என்றாலும், பார்க்கும்படி இருப்பதாக பலரும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ‘சமர்' படத்தில் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் அதனை வாங்கி தரும் படியும் நடிகர் சங்கத்தில் விஷால் புகார் அளித்தார். இதன் மீது நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது.

இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தியது. அப்போது விஷாலுக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து விட்டதாகவும் பாக்கி இல்லை என்றும் தயாரிப்பாளர் ரமேஷ் விளக்கினார். அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ‘சமர்' பட பிரச்சினையில் தனக்கு உதவவில்லை என்று நடிகர் சங்கம் மீது விஷால் குற்றம் சாட்டினார். சமர் தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் சம்பள பாக்கி தரவேண்டி உள்ளது என்றும் கூறினார்.

லிங்குசாமிக்கு நான் பணம் தரவேண்டியிருந்தபோது, என்னிடம் கறாராகே கேட்டு வாங்கிக் கொடுத்த சங்கம், 'சமர்' தயாரிப்பாளரிடம் இருந்து சம்பள பாக்கியை வாங்கித் தரவில்லை என்று விஷால் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ‘சமர்' பட தயாரிப்பாளர் டி.ரமேஷ் கூறுகையில், "விஷாலுக்கு சம்பள பாக்கி இல்லை. முழு தொகையையும் கொடுத்து விட்டேன். ‘சமர்' படத்தில் விஷாலுக்கு சம்பளமாக ரூ.3 கோடியே 75 லட்சம் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணத்தை அவர் வாங்கி விட்டார். கூடுதலாக மேலும் ரூ.25 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.4 கோடி விஷாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பேசிய சம்பளத்தை விட அதிகமாகவே வாங்கிவிட்டார்.

ஒரு பைசா கூட விஷாலுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால் சமர் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் என்னை போண்டியாக்கிவிட்டது என்பதுதான் உண்மை," என்றார்.

 

சொந்த வாழ்க்கையை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி படமா காட்டறேன்! - சோனா

Sona Postponed Making Her Auto Biography   

சென்னை: இப்போதைக்கு எனது சொந்தக் கதையை படமாக்கப் போவதில்லை என்று நடிகை சோனா அறிவித்துள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா தேவ் என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்து இயக்குகிறார். இதில், "எனது சொந்த வாழ்க்கையை சொல்லப் போவதாகவும், திரையுலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் படத்தில் இருக்கும். இருட்டு பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்," என்றெல்லாம் மிரட்டியிருந்தார்.

இந்த அறிவிப்பால், யார் யாரைப் பற்றிய ரகசியங்களை சோனா காட்சிகளாக வைத்து கவிழ்க்கப் போகிறாரோ என்று பரபரப்பாக எதிர்ப்பார்த்தனர்.

ஆனால் இப்போது அத்தனையும் புஸ்ஸாகிவிட்டது. ஆம் சோனா திடீரென அந்த முடிவை கைவிட்டு விட்டாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், "யோசித்துப் பார்த்தேன். இப்போதே என் கதையைச் சொல்லிவிட்டால், அப்புறம் என்னை யாரும் ரசிக்க மாட்டார்களே. எனவே இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்துவிட்டேன். இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும். எப்போது வந்தாலும் என் கதை கலக்கும்," என்றார்.

 

கேரள அரசு விருதுகள்: சிறந்த நடிகர் பிருத்விராஜ் - நடிகை ரீமா கல்லிங்கல்!

Prithviraj Rima Kallingal Bag Kera

திருவனந்தபுரம்: கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது பிருத்விராஜுக்கும், நடிகைக்கான விருது ரீமா கல்லிங்கலுக்கும் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகர், நடிகைகளுக்கான கேரள அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அங்கு 84 படங்கள் வெளியாகின. மூத்த சினிமா இயக்குநர் ஐவி சசி, மூத்த நடிகை சுரேகா, இயக்குநர் சிபி மலயில் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்தது. இதனை கேரள சினிமா அமைச்சர் கணேஷ்குமார் முறைப்படி அறிவித்தார்.

கமல் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்ட் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2006-ம் ஆண்டு வாஸ்தவம் படத்துக்காக சிறந்த நடிகர் விருது பெற்றவர் பிருத்விராஜ்.

சிறந்த நடிகை விருதை ரீமா கல்லிங்கல் பெற்றுள்ளார். '22 பிமெல் கோட்டயம்' என்ற படத்தில் நடித்தற்காக இவ்விருது கிடைத்துள்ளது.

ஆயாளும் ஞானும் படத்துக்காக லால் ஜோஸ் சிறந்த இயக்குநர் விருதினைப் பெறுகிறார்.

சிறந்த படமாக ‘செல்லு ய்டு' படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சலீம் குமாருக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடகராக விஜய் ஜேசுதாஸ், சிறந்த பாடகிய சித்தாரா தேர்வாகியுள்ளனர். எம்.ஜெயச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார்.

மனோஜ் கே ஜெயன், சஜிதா மாடத்தில் ஆகியோர் சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகளைப் பெற்றுள்ளனர்.

 

அமீரின் ஆதிபகவன் - விமர்சனம்

நடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்

ஒளிப்பதிவு: தேவராஜ்

இசை: யுவன் சங்கர் ராஜா

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஜெ அன்பழகன்

எழுத்து - இயக்கம்: அமீர்

கிட்டத்தட்ட ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் அமீர் படம் ஆதி பகவன். என்னதான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள் என எச்சரிக்கப்பட்டாலும், பருத்திவீரன் மாதிரி ஒரு படம் தந்த இயக்குநரின் படைப்பைக் காண குறைந்தபட்ச ஆவலாவது ரசிகர்களுக்கு இருக்கும் அல்லவா..

ஆனால் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு ஒரு விசிட்டிங் கார்டாகவும், அமீருக்கு தனக்குத் தானே போட்டுக் கொண்ட ரெட் கார்டாகவும் அமைந்துள்ளது.

ammerin aadhi bhagavan review   

தமிழ் சினிமா பல முறை பார்த்துவிட்ட இரட்டைவேட ஆள் மாறாட்டக் கதைதான் ஆதிபகவன்.

தாய்லாந்தில் மிகப் பெரிய டானாக, எந்த குற்றத்துக்கும் அஞ்சாதவராக வலம் வரும் ஆதி (ஜெயம் ரவி 1), நீத்து சந்திராவை ஒரு பாரில் பார்க்கிறார். இரண்டாவது சந்திப்பில் அவரைப் பிடித்துப் போகிறது. ஆதரவற்ற, பல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணான அவரை காப்பாற்றி, திருமணம் செய்யும் அளவுக்குப் போகிறார். அப்போது தன் தந்தையைக் காண மும்பைக்கு வருமாறு நீத்து அழைக்க, அதை ஏற்று ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்புகிறார்.

அப்போதுதான் நீத்து சந்திரா ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போகவில்லை... கொலை செய்யத்தான் என்பது தெரிகிறது. கதைக்களம் மும்பைக்குப் போகிறது. அங்கே கொடூர தாதாவாக, திருநங்கைத்தனம் நிரம்பிய பகவான் (ஜெயம் ரவி 2). பகவான் என்று தப்பாக நினைத்து ஆதியை போட்டுத் தள்ள போலீஸ், மைனிங் தாதாக்கள் என பெரிய கூட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.

ஆதி, பகவன் என இரு பாத்திரங்களில் ஜெயம் ரவி. ஆதியாக வரும்போது அவரது தோற்றமும், உடைகளும், உடல் மொழியும் செம மேன்லி! நீத்து சந்திராவை காப்பாற்ற அவர் போடும் சண்டையும் அருமை.

ஆனால் இந்த வேடத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது, ஜெயம் ரவியின் அந்த திருநங்கை பகவான் பாத்திரம். அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரகாஷ்ராஜ் முன்பே செய்துவிட்டாரே என்பதுதான் மைனஸ்.

ஒரு நடிகராக, ஹீரோவாக ஜெயம் ரவிக்கு இது முக்கிய படம். வெறும் லவ்வர் பாய் அல்லது ரெடிமேட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவர் என்ற இமேஜை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்தப் படம்.

ஹூரோயின் நீத்து சந்திரா. இரண்டாம் பாதியில் இவர்தான் வில்லி எனும் அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியுடன் மோதும் காட்சியில் அசத்தியிருக்கிறார். அமீர் படத்தில்தான் இதெல்லாம் சாத்தியம். ஆனாலும் இம்புட்டு இம்புட்டு.. சிகரெட் ஆகாது ஆத்தா!!

இந்த மூன்று பாத்திரங்கள் தவிர, மற்ற எல்லாருமே துணைநடிகர்கள் ரேஞ்சுக்குத்தான் வருகிறார்கள். எனவே அவர்களின் நடிப்பு அல்லது முக்கியத்துவம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, சுதா சந்திரன் உள்பட.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சாக்ஷி ஆடும் அந்த க்ளப் டான்ஸ் மற்றும் காற்றிலே பாடலும் கேட்கும்படி உள்ளன. தேவராஜின் ஒளிப்பதிவு, அமீர் சொன்ன மாதிரி ஒரு Raw Action படமாக ஆதிபகவனைக் காட்டியிருக்கிறது.

பல காட்சிகள் நம்பும்படி இல்லை என்று வெளியில் வந்து சொன்னாலும், பார்க்கும்போது நம்பும் அளவுக்கு வித்தை காட்டியிருப்பது அமீரின் கைவண்ணம்.

ஆனால் நீத்து சந்திரா வரும் இரண்டாவது காட்சியிலேயே அவரது பாத்திரம் இதுதான் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.

படத்தின் முதல் பாதி முழுக்க எதையோ அழுத்தமாக சொல்ல வருவதுபோன்ற பாவலா தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லை. அதேபோலத்தான் இரண்டாவது பாதியும். படத்தின் இந்த தன்மைதான், பார்வையாளர்களை திருப்தியற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

காட்சிகளின் மெதுவான நகர்வு ரொம்ப நேரம் ஊமைக்குத்து வாங்கியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துப்பாக்கி சண்டைக் காட்சிகள் அனைத்துமே காதுல பூ ரகம்.

இப்படி ஒரு படத்தைத் தர அமீர் 5 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை... ஆறுமாதமே அதிகம்.

ஆதிபகவன் பார்த்த பிறகும், இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அமீர்... உங்களால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்!

-எஸ்.ஷங்கர்

 

சத்தியம் டிவியில் பட்ஜெட் பார்வைகள்

Budget Overview On Sathiyam Tv

சத்தியம் தொலைக்காட்சியில் மத்திய பட்ஜெட் பற்றி மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

பொருளாதார நிபுணர்கள் நேரடியாக கலந்துரையாடுகின்றனர். நேயர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

சத்தியம் தொலைக்காட்சியில் பகல் மின்னல்கள், சத்தியம் சாத்தியமே, க்ரைம் ரிப்போர்ட், மற்றும் சத்தியத் தராசு, போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அன்றாடப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன.

அந்த வரிசையில் பட்ஜெட் சிறப்பு பார்வை விவாதமும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

 

ஷிப்டிங் முறையில் இங்கிலாந்தில் 5வது வாரமாகத் தொடர்கிறது விஸ்வரூபம் - அய்ங்கரன்

Viswaroopam Still Runs England On Shifting Basis

இங்கிலாந்தில் 5வது வாரமாக விஸ்வரூபம் படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதாக அய்ங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் ரசிகர்கள் கேட்டுக் கொள்வதற்கிணங்க, புதிய புதிய ஏரியாக்களில் இந்தப் படத்தை ஷிப்டிங் முறையில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 8 தியேட்டர்களில் இந்த வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது விஸ்வரூபம்.

இதுகுறித்து அய்ங்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தில் 5வது வாரமாக ஓடும் முதல் தமிழ்ப் படம் விஸ்வரூபம். கமல் ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, உருது, மராட்டி பேசும் மக்கள் இந்தப் படத்தை தங்கள் பகுதிகளில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வாரம் 8 சினிவேர்ல்டு அரங்குகளில் படத்தை திரையிட்டுள்ளோம். அவரவர் பகுதிகளில் படம் வெளியாக வேண்டும் என விரும்புவோர் அதற்கான வேண்டுகோளை எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விரைவில் பாலாவின் பரதேசி உள்பட பல பெரிய படங்களை வெளியிடவிருக்கிறோம்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.