நைட் 9 மணியானால் பொம்பள புள்ளைங்கள இல்ல ஆம்பள பசங்களத் தான் வீட்டில் பூட்டி வைக்கணும்: பிராச்சி

|

Boys Should Be Locked At Home Post

மும்பை: இரவு 9 மணியானால் பெண்களை அல்ல, ஆம்பள பசங்களை தான் வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் என்று நடிகை பிராச்சி தேசாய் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் டெல்லி கற்பழிப்பு வழக்கு குறித்து பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி தேசாயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

ஆண்கள் மாற வேண்டும். இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி மற்றும் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதிகமாக கட்டுப்பாடுகள் விதித்தால் தான் அது போன்றவற்றை செய்யத் தோன்றும். தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் கற்பழித்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சியாக உள்ளது. நன்றாக படித்த யாரும் இது போன்றவற்றை செய்ய மாட்டார்கள். அனைவரும் படிக்க வேண்டும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெண்களை பார்க்கும் விதத்தில் நிறைய வித்தியாசம் உள்ளது. பெண் பிள்ளைகளை அல்ல ஆண் பிள்ளைகள் தாங்கள் மனிதர்களாக நடந்துகொள்வோம் என்று உறுதியளிக்கும் வரை அவர்களைத் தான் இரவு 9 மணி ஆனால் வீட்டில் பூட்டி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Actress Prachi Desai told that, I think not girls, but boys should be locked at home after 9 pm till the time they promise to improve as humans. She said so when asked about the current situation in the country and Delhi rape case.

 

Post a Comment