தொட்டால் பூ மலரும் படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷக்தி. இயக்குநர் பி வாசுவின் மகன். சூப்பர் ஸ்டார் ரஜினிதான் அவரை திரையுலகுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் போன்ற சில படங்களில் நடித்தார். இப்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்துவரும் ஷக்தி, அடுத்து தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்துக்கு ‘தெலுகுலோ நாக்கு நசனி படம் ப்ரேமா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பூர்ணா ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்கவிழா, காதலர் தினமான இன்று ஹைதராபாதில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடந்தது.
நாராயண பாபு, பூர்ணிமா நாராயன் மற்றும் வாசன் எஸ்எஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைக்கிறார். ஸ்ரீ வெண்ணிலா பாடல்களை இயற்றுகிறார்.
Post a Comment